Pushpa 2: தொடர்ந்து வசூல்வேட்டையில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம்.. 10 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பதத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது புஷ்பா 2 படம். கடந்த 2021ம் ஆண்டில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் அந்த படத்தை காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் புஷ்பா 2 படம் உருவாகியிருந்தது.
இந்நிலையில் இந்த படம் ரிலீசாகி 6 தினங்களிலேயே 1000 கோடி கிளப்பில் இணைந்தது. இந்திய அளவில் அதிவேகமாக இந்த சாதனையை எட்டியுள்ள படம் என்ற பெருமையும் புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை திரையரங்குகளில் சென்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் அதிரடி ஆக்ஷன் மட்டுமில்லாமல் ரொமான்ஸ் காட்சிகளிலும் ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜுன் சிறப்பாக கூட்டணி அமைத்துள்ளார்.

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடிவரும் நிலையில் கடந்த 10 நாட்களில் படத்தின் வசூல் அதிரிபுதிரியாக எகிறியுள்ளது. இடையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீசின்போது சந்தியா திரையரங்கில் நடந்த நிகழ்வுக்காக அல்லு அர்ஜுன் சிறைக்கு சென்றதும் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. கடந்த 5ம் தேதி படம் ரிலீசான நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
10 நாட்களில் அதிரடி வசூல்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா 2 படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை தன்னுடைய மிரட்டலான ஸ்கிரிப்ட்டால் மிகச் சிறப்பாக்கியுள்ளார் இயக்குநர் சுகுமார். படம் தற்போது இரண்டாவது வாரத்தில் சிறப்பாக நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் இந்த படத்தின் வசூல் குறித்த நிலவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த பத்து நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 1190 கோடி ரூபாய்களை இந்த படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவினர் மிகப்பெரிய உற்சாகத்தை வெளியிட்டு வருகின்றனர்.
அல்லு அர்ஜுன் கைது: இருந்த போதிலும் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது சந்தியா திரையரங்கில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு சில மணி நேரங்களிலேயே ஜாமீன் கிடைத்த போதிலும் நேரம் ஆனதன் காரணமாக அவர் நேற்று முன்தினம் இரவு சிறையிலேயே இருக்க நேரிட்டது. நேற்றைய தினம் அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்த நிலையில் அவரை மிகவும் உருக்கமாக அவரது குடும்பத்தினர் எதிர் கொண்டதையும் பார்க்க முடிந்தது. அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் காரணமாக புஷ்பா 2 படம் மேலும் கவனத்தை பெற்றுள்ளது.
அல்லு அர்ஜுன் -சுகுமார் கூட்டணி: புஷ்பா 2 படம் மேலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த 2021ம் ஆண்டு புஷ்பா படம் ரிலீசாகி 500 கோடிகளுக்கும் மேல் வசூலை குவித்த நிலையில் அடுத்ததாக புஷ்பா 2 படத்தை தயாரிப்பு தரப்பான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் அந்த எதிர்பார்ப்பை அல்லு அர்ஜுன் -சுகுமார் கூட்டணி சிறப்பாகவே பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தின் 3வது பாகமும் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள புஷ்பா 2 படம் 6 நாட்களிலேயே 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா ஜோடி: படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்திருந்த நிலையில், இவர்களது காம்பினேஷன் மற்றும் கெமிஸ்ட்ரி படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. தன்னுடைய மனைவியின் விருப்பத்திற்காக இந்த படத்தில் புஷ்பா எந்த அளவுக்கு செல்கிறார் என்பதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இதையொட்டிய படத்தின் ஸ்பீடான காட்சிகள் ரசிகர்களை கட்டிப்போட்டது. இதனிடையே கடந்த 10 நாட்களில் இந்தியில் மட்டும் 498.1 கோடி ரூபாய்களை புஷ்பா 2 படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெலுங்கில் 262.6 கோடிகளும் தமிழகத்தில் 449.5 கோடிகளும் புஷ்பா 2 வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையளம் மற்றும் கன்னடத்திலும் முறையே 12.95 மற்றும் 5.95 கோடிகளை 10 நாட்களில் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











