Pushpa 2: ஷாருக்கான் சாதனையை பின்னுக்கு தள்ளிய புஷ்பா 2... கோலிவுட்டிலும் மாஸ்!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் -சுகுமார் கூட்டணியில் முன்னதாக கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்த புஷ்பா படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது புஷ்பா 2 படம். இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியான புஷ்பா 2 படம் முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் கலெக்ஷனை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் பெற்றுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வாரயிறுதி நாட்களில் இந்தப் படம் மேலும் கல்லா கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் 1000 கோடி கிளப்பிலும் இணையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுன் -சுகுமார் கூட்டணியில் அடுத்த அதிரடி சரவெடியாக உருவாகி கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது புஷ்பா 2 படம். முன்னதாக கடந்த 2021ம் ஆண்டில் இந்தப் படத்தின் முதல் பாகம் ரிலீசாகி சர்வதேச அளவில் மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்திருந்தது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 500 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகியுள்ளது. படம் ப்ரீ புக்கிங்கிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கல்லா கட்டிய நிலையில், முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பு: முதல் பாகத்தை காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு மிகுந்த பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது.முதல் பாதியை காட்டிலும் இரண்டாவது பாதி சிறப்பான கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஜவான் சாதனை முறியடிப்பு: இந்தப்படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து மிகப்பெரிய வசூலை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முதல் நாளிலேயே 11 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளது. பாலிவுட்டில் இந்தப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் 65 கோடி ரூபாய்களாக உள்ள நிலையில், முன்னதாக ஷாருக்கானின் சாதனையை புஷ்பா 2 படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ஷாருக்கான் -அட்லி காம்பினேஷனில் வெளியான ஜவான் படம், இந்தியில் முதல் நாள் கலெக்ஷனாக 63 கோடி ரூபாய்களை மட்டுமே வசூலித்திருந்தது.
பான் இந்தியா கலாச்சாரம்: இந்நிலையில் தற்போது ஷாருக்கானின் இந்த சாதனையை அல்லு அர்ஜுன் முறியடித்துள்ளார். பாலிவுட் பாட்ஷாவாக கொண்டாடப்படும் ஷாருக்கானின் பட வசூலையே அல்லு அர்ஜுன் முறியடித்துள்ளது மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பான் இந்தியா கலாச்சாரம் வந்த பிறகு, தென்னிந்திய மொழிப் படங்கள் பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றன. முன்னதாக பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் என அடுத்தடுத்த படங்கள் பாலிவுட்டில் அதிகமான வசூலை ஈட்டியுள்ளன. அந்த வரிசையில் தற்போது புஷ்பா 2 படமும் இணைந்துள்ளது.
மும்பை திரையரங்கில் அதிர்ச்சி: இவ்வாறு தென்னிந்திய மொழிப் படங்கள் பாலிவுட் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருவது அங்குள்ள ரசிகர்களை சற்று கடுப்புக்கும் உள்ளாக்கியுள்ளது. இதன் வெளிப்பாடாக நேற்றைய தினம் மும்பையில் பாந்த்ரா பகுதியின் பிரபல திரையரங்கில், இடைவேளையின் போது ஸ்ப்ரே ஒன்றை அடித்து, ரசிகர்களுக்கு மயக்கம், இருமல், தும்மல் உள்ளிட்டவற்றை மர்மநபர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பான் இந்தியா படங்களாக அனைத்து படங்களையும் அனைத்து மக்களும் பார்க்கும்படி செய்யப்படுவது வரவேற்கத்தகுந்த விஷயமாக உள்ள நிலையில், இதில் இத்தகைய மொழி பேதத்தை நுழைப்பது சரியாக இருக்காது என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











