Allu arjun: அடேங்கப்பா முதல் நாள்லயே இவ்வளவு கோடி வசூலா.. புஷ்பா 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது புஷ்பா படம். இந்தப் படம் அல்லு அர்ஜுன் கேரியர் பெஸ்ட்டாக அமைந்து 500 கோடிகளை தாண்டியே வசூலித்தது. சுகுமார் இயக்கத்தில் முன்னதாகவே படங்களில் நடித்திருந்தாலும் இந்தப்படம் இவர்கள் கூட்டணியில் மாஸ் காட்டியது.

இந்தப் படத்தின்அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக புஷ்பா 2 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்றைய தினம் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

allu arjun pushpa 2 movie mythri movie makers

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுன் -இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகி நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது புஷ்பா 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய மாஸ் வெற்றியை பெற்றது. படத்தின் இந்த சூப்பர்ஹிட்டை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் அடித்தளம் போடப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக உருவாகிவந்த இந்தப் படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப்படம் ரிலீசான நிலையில், இந்தியா முழுவதிலும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டனர்.

கலவையான விமர்சனங்கள்: இதனிடையே சர்வதேச அளவில் நேற்றைய தினம் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனின் நடிப்பு பாராட்டுக்களை பெற்ற நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் அதிகப்படியான கவர்ச்சி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதை என்ஜாய் செய்தவர்களும் இருக்கத்தான் செய்தனர். இதனிடையே படத்தில் ஸ்ரீலீலாவின் டான்சும்அதிகமான விமர்சனங்களை பெற்றுள்ளது. முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட நிலையில் அது சிறப்பாக அமைந்திருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலீலாவும் இந்தப் பாடலில் அதிகப்படியான கவர்ச்சிக் காட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புஷ்பா 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூல்: இந்தப் படம் ரிலீசுக்கு முன்னதாகவே புக்கிங்கில் மாஸ் காட்டியது. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே சர்வதேச அளவில் 100 கோடி ரூபாயை இந்தப்படம் வசூலித்ததாக முன்னதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளப்பக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாக்ஸ் ஆபீசில் புஷ்பா 2 படம் இந்திய அளவில் வரலாறு படைத்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முதல் நாளில் சர்வதேச அளவில் இந்தப் படம் 294 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

allu arjun pushpa 2 movie mythri movie makers

1000 கோடி வசூல்?: இந்திய அளவில் முதல் நாள் கலெக்ஷனில் இந்தப்படம் அதிகப்படியான வசூலை குறித்துள்ள நிலையில், இதுகுறித்து ரசிகர்களும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்து வருகின்றனர். முதல் நாளிலேயே இந்தப்படத்தில் வசூல் தாறுமாறாக அமைந்துள்ள நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் வாரயிறுதி நாட்களாக உள்ள நிலையில், இந்த வசூல் 500 கோடி ரூபாய்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. படம் சர்வதேச அளவில் 1000 கோடி கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X