Pushpa 2: சில மணிநேரங்களிலேயே 37 மில்லியனை தாண்டிய புஷ்பா 2 ட்ரெயிலர்.. தமிழிலும் மிரட்டல்!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுனின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்துள்ளது புஷ்பா படம். இந்த படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கி இருந்த நிலையில் படம் சிவப்பு சந்தன மரக்கடத்தலை மையமாகக் கொண்டு வெளியானது. படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே ரீச் ஆனது. குறிப்பாக தமிழ், ஹிந்தி ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாகமாக உருவாகியுள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். அதையொட்டி நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சில மணி நேரங்களிலேயே அதிகமான வீயூஸ்களை பெற்றுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள புஷ்பா 2 அடுத்த மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக இந்தப் படத்தின் டீசர், கிளிம்ப்ஸ், பாடல்கள் என வெளியாகி ரசிகர்களை சிறப்பக கவர்ந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.
புஷ்பா 2 படம்: புஷ்பா 2 படத்தின் ட்ரெயிலர் முன்னதாக தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டுமே வெளியான நிலையில் அடுத்தடுத்து மற்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜுன் தனக்கேயுரிய ஸ்டைலில் ட்ரெயிலரை ரிலீஸ் செய்திருந்தார். அரசியல் கூட்டத்தை விட அதிகமான கூட்டம் இந்த ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் காணப்பட்டதாக அனைத்து தரப்பினரும் உற்சாகம் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜுன் புஷ்பா ஸ்டைலில் ட்ரெய்லரை வெளியிட்டது அவரது ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியிருந்தது.
புஷ்பா 2 ட்ரெயிலர் ரிலீஸ்: இதையடுத்து ரசிகர்களின் ஆரவாரம் நிற்க பல நிமிடங்கள் ஆகின. இந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன் ரசிகர்களே தன்னுடைய அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம் என்று பேசியிருந்தார். அல்லு அர்ஜுன் -சுகுமார் கூட்டணியில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய பாராட்டுகளையும் விமர்சனங்களையும் வசூலையும் பெற்றிருந்தது. இதையடுத்து முதல் பாகத்தை காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகியுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் மிகப்பெரிய விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் புஷ்பா 2 குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகமான வியூஸ்: முதல் பாகமே சர்வதேச அளவில் 500 கோடிகளை தாண்டி வசூலித்த நிலையில் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள புஷ்பா 2 படம் 1000 கோடிகளை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு பான் இந்தியா ஸ்டாராகவும் அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து வருகிறார் அல்லு அர்ஜுன். இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகி உள்ள புஷ்பா 2 படத்தின் ட்ரெயிலர் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து 15 மணி நேரங்களிலேயே 37 மில்லியன் வியூஸ்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. முன்னதாக வெளியான பல படங்களின் ஒரு நாள் வியூஸ் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளது.
24 மணிநேரத்தில் அதிக வியூஸ்: முன்னதாக அதிரடியாக வெளியான குண்டூர் காரம் படம் 37.68 மில்லியன் வியூஸ்களையும் சலார் படம் 32.58 மில்லியன் வியூஸ்களையும் லியோ ட்ரெயிலர் 31.9 மில்லியன் வியூஸ்களையும் 24 மணி நேரத்தில் பெற்றிருந்த நிலையில், 15 மணிநேரங்களிலேயே இந்த சாதனைகளை புஷ்பா 2 ட்ரெயிலர் முறியடித்துள்ளது. இதையடுத்து அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழிலும் இந்த ட்ரெயிலர் வெளியான நிலையில் தமிழ் ரசிகர்களும் அடுத்தடுத்து புஷ்பா 2 படத்தின் டிரைலரை பார்த்து கொண்டாடி வருகின்றனர். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











