Pushpa 2 trailer: இந்தி மார்க்கெட்தான் முக்கியம்.. தமிழ் ரசிகர்களை கண்டுக்காத புஷ்பா 2 டீம்!
ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சர்வதேச அளவில் மிகவும் அதிகமான வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.
படம்அடுத்த மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் ஆகஸ்ட் மாதத்திலேயே சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் சில பாடல்கள் உள்ளிட்டவற்றின் சூட்டிங் எடுத்து முடிக்கப்படாத நிலையில் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டது.

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் கூட்டணியில் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்த படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சிவப்பு சந்தன மரக்கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் சுகுமார். பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படத்தின் மேக்கிங் மற்றும் ஸ்கிரிப்ட் சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படம் சர்வதேச அளவில் 500 கோடிகளை தாண்டி வசூலித்தது.
புஷ்பா 2 படம்: இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் அறிவிப்பை மேற்கொண்ட படக்குழுவினர் படத்தின் சூட்டிங்கை ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களிலும் வெளிநாடுகளிலும் எடுத்து முடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியே இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பாடல் காட்சி உள்ளிட்ட சில சூட்டிங் மீதமிருந்ததால் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் படம் டிசம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
புஷ்பா 2 ட்ரெயிலர் ரிலீஸ்: முதல் பாகத்தில் இவரது இசை மிகச்சிறப்பாக அமைந்து பாடல்கள் அனைத்தும் கொண்டாட செய்தன. இந்நிலையில் புஷ்பா 2 படத்திற்கான அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை அதிகப்படியான கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளன. முன்னதாக படத்தின் கிளிம்ப்ஸ், டீசர் ஆகியவையும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்திருந்த நிலையில், இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முன்னதாக முதல் பாகத்தில் புஷ்பான்னா ஃப்ளவருன்னு நினைச்சியா ஃபயரு என்ற பஞ்ச் டயலாக் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது
அடுத்தடுத்த பஞ்ச் டயலாக்குகள்: இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தில் அதை இன்னும் சிறப்பான பஞ்சாக கையாண்டுள்ளார் இயக்குநர் சுகுமார். புஷ்பான்னா ஃப்ளவருன்னு நினைச்சியா என்று புஷ்பாவின் அசிஸ்டெண்ட் கேட்க, துப்பாக்கியுடன் காணப்படும் பகத் ஃபாசில் ஃபயருதானே என்று கேட்கிறார். இதையடுத்து பேசும் அல்லு அர்ஜுன், வைல்ட் ஃபயரு என்று கூறுவதாக இந்த ட்ரெயிலரில் காணப்படுகிறது. மேலும் தான் நேஷனல் இல்லை என்றும் இன்டர்நேஷனல் என்றும் அவர் கூறுவதாகவும் இந்த ட்ரெயிலரில் காணப்படுகிறது. அடுத்தடுத்து மிகவும் பிரம்மாண்டமான காட்சிகளின் கோர்வையாக இந்த ட்ரெயிலர் காணப்டுகிறது.
அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா கெமிஸ்ட்ரி: முதல் பாகத்தை காட்டிலும் இந்த பாகத்தில் அல்லு -அர்ஜுன் -ராஷ்மிகா மந்தனாவின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலீலாவின் டான்சும் அள்ளும் என்று எதிர்பார்க்கலாம். படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் அனைத்து மொழிகளிலும் படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டுமே தற்போது ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை வசூலை பெற தமிழ் ரசிகர்களும் காரணமாக அமைந்தது.
லேட் ரிலீஸ்: ஆனால் புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியனபோது முதலில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில்தான் ரிலீஸானது. தமிழில் ரிலீஸாகவில்லை. அது பெரும் கண்டனத்தை சந்தித்தது. அதுமட்டுமின்றி பான் இந்தியா படம் என்பதால் ஹிந்திதான் புஷ்பா 2 படக்குழுவுக்கு முக்கியம் அதனால்தான் தென் மாநிலத்தில் ஒரு மொழியில் ரிலீஸ் செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் செய்த பிறகு தமிழில் புஷ்பா 2 ட்ரெய்லர் சிறிது நேரம் கழித்து ரிலீஸ் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











