52 வயதிலும்.. என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா.. தெறிக்க விடும் அமலாவின் ஒர்க் அவுட்!
சென்னை : நடிகை அமலா உடற்பயிற்சி செய்யும் காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
Recommended Video
நடிகை அமலா நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்த பின் நடிப்பதை ஏறக்குறைய நிறுத்தி விட்டார். தற்போது அமலாவிற்கு 52 வயதாகிறது. இந்த வயதில் மற்ற நடிகைகள் பெரும்பாலும் தங்களின் பேரன் பேத்திகளுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஆனால் அமலாவோ கடினமான உடற்பயிற்சிகளை செய்து ஆச்சரியபட வைத்துள்ளார் .

இந்த காணொளியில் இளைஞர்களுக்கு இணையாக பளுவை தூக்கி தோள்பட்டையில் வைத்து அசத்தி வருகிறார் அமலா. இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால் அமலா உடற்பயிற்சிகள் செய்யும் போது அருகே எந்த பயிற்சியாளரும் உதவியாளரும் இல்லை தானாக ஒரு இடத்தில் கேமராவை ஆன் செய்து அதில் பேசிய படியே உடற்பயிற்சியை மேற்கொள்கிறார் .

இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் அமலாவிற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். மேலும் இந்த வயதிலும் நீங்கள் உடல் மேல் செலுத்தும் கவனம் எங்களுக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்று ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியாய் கூறியுள்ளனர்.

இந்த காணொளியின் இறுதியில் அமலா உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தே கட்டாயம் மேற்கொண்டு கொரன்டைன் நேரத்தை சரியாக செலவிடுங்கள் என்று கேட்டுகொண்டுள்ளார் .

நடிகர் மற்றும் அமலாவின் மகனான அக்கினி அகில் இந்த காணொளியின் கமெண்டில் வந்து 'மை சூப்பர்வுமன்' என்று கமெண்டை கொடுத்து லைக்கும் போட்டுள்ளார். இந்த வயதில் இப்படி வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் பெண்களை நாம் இதற்கு முன் பார்த்திருப்பதற்கு அதிகம் வாய்பில்லை. இதனால் அகில் கூறும் கருத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் அமலா ஒரு சூப்பர்வுமனாக செயல்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











