Ambani Shankar : நான் ஆபிஸ் பாயாக இருந்தேன்.. அவரால் கிடைத்த வாய்ப்பு.. நெகிழ்ந்த அம்பானி சங்கர்!

சென்னை : தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் அம்பானி சங்கர்.

அஜித் நடித்த ஜி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்த இவர், அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாசுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

அம்பாசமுத்திரம் அம்பானி படம் வெற்றி பெற்றதை அடுத்து தனது பெயரில் அம்பானியை சேர்த்துக்கொண்டு அம்பானி சங்கர் ஆனார்.

Actor Ambani Shankar opened up about First opportunity in cinema

நடிகர் அம்பானி சங்கர் : நடிகர் அம்பானி சங்கர், ஆறு, பேரரசு, இன்பா, குசேலன், திரௌபதி, புஷ்பா என சுமார் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அம்பானி சங்கர் 2012ம் ஆண்டு மோனிகா நந்தினி என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வடிவேலு தான் தனது ரோல் மாடல் என்றும், அவரைப் போல காமெடியில் ஒரு சிறந்த நடிகராக வரவேண்டும் என்பதை லட்சியமாக வைத்து இருக்கிறார் அம்பானி சங்கர்.

ஆபிஸ் பாயாக இருந்தேன் : இந்நிலையில், அம்பானி சங்கர் அளித்துள்ள பேட்டியில், நான் ஆபிஸ் பாயாக தான் என்னுடைய சினிமா கேரியரை தொடங்கினேன். ஊரில் இருக்கும் போதே நான் தலயின் தீவிர ரசிகன். அவரோட எல்லா படத்தையும் வெறித்தனமாக பார்ப்பேன். அஜித் நடித்த தீனா படத்தை பலமுறை பார்த்து இருக்கிறேன் அஜித் சாரோட ரசிகனா இருந்த எனக்கு, என்னுடைய முதல் படமே அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை நான் சத்தியமா எதிர்பார்க்கவில்லை.

Actor Ambani Shankar opened up about First opportunity in cinema

கடவுளுக்கு நன்றி : எல்லாமே தற்செயலாக நடந்தது, எல்லாமே கடவுளின் செயல் தான். நான் பாக்யராஜ் சாரிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, பாக்யராஜ் சாரை பார்ப்பதற்காக லிங்குசாமி சார் அங்கு வந்தார். அப்போ பாக்யராஜ் சாரின் உதவியாளர், என்னை லிங்குசாமியிடம் அறிமுகம் செய்து வைத்துவிட்டு இந்த பையனுக்கு நடிக்க ஏதாவது வாய்ப்பு இருந்தா கொடுங்க என்றார்.

தலைகால் புரியல : லிங்குசாமி சார் என்னை பார்த்துவிட்டு, என்னிடம் எதுவும் சொல்லவில்லை, நான் சாரிடம் சொல்கிறேன் என்று பாக்யராஜ் சாரை பார்க்க சென்றுவிட்டார். அதன் சிறிது நேரம் கழித்து, பாக்யராஜ் சாரை பார்த்து என்ன சொன்னார் என்று கேட்டேன். அஜித் நடிக்கும் ஜி படத்தில், உனக்கு ஏதோ ரோல் இருக்கு என்று லிங்குசாமி சொல்லியிருக்கிறார், அதற்கு ஏதோ டெஸ்ட் எடுக்கிறார்களாம், நீ போய் அதை அட்டன் பண்ணு என்றார். இதை கேட்டதும் எனக்கு தலைகால் புரியவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X