குடும்பத்தில் ஒருவர் போல் உணர்கிறேன்..ரஜினியை பார்த்த ஃபீல் உள்ளது..விஜய் பற்றி புகழ்ந்த அமீர்கான்

சென்னை : பாலிவுட் நடிகர் அமீர்கான் 30 ஆண்டுகளுக்கும் மேலாகபாலிவுட்டில் முன்னணி நடிகராக, இந்திய அளவில் சிறப்பான நடிகராக இருந்து வருகிறார். இவரது பல படங்கள் சமூக அக்கறையுடன் இருக்கும்.

ஹாலிவுட்டில் சிறப்பாக ஓடிய ஃபாரஸ்ட் கம்ப் ஆங்கிலப்படத்தை தழுவி தற்போது இவரது நடிப்பில் லால் சிங் சத்தா என்ற படம் வரும் 14 ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.அதற்கான விழாவில் நேற்று அமீர்கான் கலந்துக்கொண்டார்.

லால் சிங் சத்தா படம்

லால் சிங் சத்தா படம்

நடிகர் அமீர்கானின் லால் சிங் சத்தா படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்திற்கான புக்கிங்குகள் துவங்கியுள்ளன. மிகவும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே இந்தப் படம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமசில் வெளியான 83 படத்தின் புக்கிங்குகளில் காணப்பட்ட வரவேற்பை போலவே இந்தப் படமும் ரசிகர்களிடையே பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான முன்பதிவு

சிறப்பான முன்பதிவு

இந்தப் படம் பஞ்சாபை மையமாக கொண்டு உருவாகியுள்ளதால் அந்த மாநில மக்கள் அதிகமாக முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்பதிவில் மட்டுமே இந்தப் படம் 8 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்று பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதே நாளில் வெளியாகவுள்ள அக்ஷயின் ரக்ஷா பந்தன் படம் குறைவான முன்பதிவையே பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உதயநிதி வெளியீடு

தமிழகத்தில் உதயநிதி வெளியீடு

லால் சிங் சத்தா படம் தமிழகத்திலும் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட உள்ளது. நகைச்சுவை நாடகமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அமீர்கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

ஃபாரஸ்ட் கம்ப் ஆங்கிலப்படத்தின் ரீமேக்

ஃபாரஸ்ட் கம்ப் ஆங்கிலப்படத்தின் ரீமேக்

கடந்த 1994ல் வெளியான ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்மிங் படத்தின் ரீமேக்காக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் அமீர்கானுடன் நாக சைத்தன்யா இணைந்து நடித்துள்ளார். ராணுவ வீரரின் கதையை மையமாக கொண்ட இந்தப் படம் இந்திய அளவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

பிரமோஷனில் தீவிரம்

பிரமோஷனில் தீவிரம்

இந்தப் படத்திற்கான பிரமோஷனில் கடந்த சில வாரங்களாக அமீர்கான் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்த கேள்விக்கும் மிகவும் நெகிழ்ந்துபோய் பதிலளித்துள்ளார். விஜய்யை பார்க்கும்போது ஒரு சகோதரனாக குடும்பத்தில் ஒருவரை பார்க்கும் ஃபீலிங் வருகிறது, ரஜினிகாந்தை பார்த்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதை விஜய்யை பார்த்தபோது உணர்ந்தேன். என்று தெரிவித்துள்ளார். அமீர்கானின் இந்த பதிலில் ஆயிரம் உண்மைகள் பொதிந்துள்ளது. இப்படி தமிழக மக்களும் உணர்ந்ததால் தான் இருவரும் டாப் ஹீரோக்களாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X