மழையை ரசித்தபடி கதைபேசும் ரஜினி & அமிதாப்.. வேட்டையன் படத்தில் அமிதாப் கேரக்டர் பெயர் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -இயக்குநர் டிஜே ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் லைகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக படத்தின் அடுத்தடுத்த கேரக்டர்களின் அறிமுக வீடியோக்களை அதிரடியாக வெளியிட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ளது வேட்டையன். இந்தப் படத்தை முன்னதாக ஜெய் பீம் படம் மூலம் கவனம் பெற்ற டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். போலி என்கவுண்டருக்கு எதிராக இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகின்றன. படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாகியுள்ளார் மஞ்சு வாரியர். இவர்கள் இருவரின் கூட்டணியில்தான் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. லிரிக் வீடியோவாக வெளியான நிலையிலும் இந்தப் பாடலில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை லைகா நிறுவனம் செய்து வருகிறது. கடந்த சில தினங்களாக படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் வீடியோக்களை அதிரடியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரித்திகா சிங், துஷாரா, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களின் கேரக்டர் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமிதாப் பச்சன் கேரக்டர் வீடியோ: இதனிடையே படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் கேரக்டர் வீடியோவையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்துள்ள நிலையில், இவர்களின் கேரக்டர்கள் மற்றும் காம்பினேஷன் காட்சிகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அமிதாப்பச்சனின் கேரக்டர் வீடியோவில் அவர் இந்தப் படத்தில் சத்யதேவ் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுடன் இருக்கும்படியான காட்சிகள் இந்த வீடியோவில் காணப்படுகின்றன.
அமிதாப் -ரஜினிகாந்த் காம்பினேஷன்: அமிதாப் பச்சனை ரஜினிகாந்த் கட்டித்தழுவுவதாகவும் காட்சிகள் அமைந்துள்ளன. இருவரும் மழையை ரசித்தபடி கதைபேசுவதாகவும் காணப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் பெருமையான அமிதாப் பச்சனுடன் இணைந்துள்ளது குறித்தும் படக்குழு இந்த வீடியோவில் பெருமை தெரிவித்துள்ளது. இந்த வயதிலும் கம்பீரமான நடையுடன் அமிதாப் பச்சன் நடைபோடுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் இவருக்கு அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











