47 வருஷமாச்சு.. திருமண போட்டோக்களை பகிர்ந்து சுவாரசிய தகவலை சொன்ன அமிதாப் பச்சன்..குவியும் வாழ்த்து!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் தனது 47வது திருமண நாளில் தனது திருமண போட்டோக்களை சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார்.

இந்தி சினிமாவின் உச்ச நடிகரான அமிதாப் பச்சன், இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து குலாகோ சித்தாபோ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் ரிலீஸ் ஆன நிலையில் படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது.

திருமண போட்டோக்கள்

திருமண போட்டோக்கள்

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் தம்பதி இன்று தங்களின் 47வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

சுவாரசிய தகவல்..

சுவாரசிய தகவல்..

மேலும் தனது திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்த சுவாரசிய தகவலையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, 47 வருடங்கள்.. இன்று.. ஜூன் 3, 1973!! சன்ஜீர் படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை கொண்டாட சில நண்பர்களுடன் முதல் முறையாக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தோம்.

போவதற்கு முன்பு திருமணம்

போவதற்கு முன்பு திருமணம்

என் அப்பா கேட்டார், நீ யாருடன் போகப் போகிறாய்? நான் யாருடன் போகப்போகிறேன் என்று கூறினேன். அவர் சொன்னார், போவதற்கு முன்பாக நீ அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் நீ போகக்கூடாது என்றார். நான் என் தந்தையின் உத்தரவுக்கு கீழ்படிந்தேன்..!! என குறிப்பிட்டு தங்களின் திருமண போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் அமிதாப்.

1973ஆம் ஆண்டு திருமணம்

1973ஆம் ஆண்டு திருமணம்

நடிகை ஜெயபாதூரியுடன் இணைந்து சில்சிலா, அபிமன், சுப்கே சுப்கே, மிலி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் அமிதாப் பச்சன். அப்போது அவர்களுக்குள் காதல் மலரவே இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 1973 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தீராத காதல்

தீராத காதல்

பாலிவுட்டின் அன்பிற்குரிய இந்த தம்பதிக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும் ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். மருமகள் மருமகன் பேரக்குழந்தைகள் என நிறைவான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மனைவி மீது இன்னமும் தீராத காதல் கொண்டுள்ள அமிதாப் பச்சன் அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

Recommended Video

Miya George Lock Down Wedding • Ashwin Philips, Vettrivel, Cobra, Vikram
குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

47 வது திருமண நாளை கொண்டாடி வரும் இந்த சீனியர் தம்பதியருக்கு பாலிவுட் திரையுலகம் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் அமிதாப் ஷேர் செய்த அவர்களின் திருமண போட்டோக்களை இதுவரை பத்தரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X