twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 3 விமானங்கள்.. தமிழகத்துக்கும் உண்டாம்.. அசத்தும் அமிதாப் பச்சன்..

    |

    சென்னை: நடிகர் அமிதாப் பச்சன் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல மூன்று சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பலரும் வேலையிழ்ந்துள்ளனர்.

    பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் பொதுமுடக்கத்தால் போக்குவரத்து வசதியின்றி தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    பிரபல நடிகரின் பெண் மேனேஜர் திடீர் தற்கொலை.. உடனிருந்த வருங்கால கணவர்.. பரபரப்பில் திரையுலகம்பிரபல நடிகரின் பெண் மேனேஜர் திடீர் தற்கொலை.. உடனிருந்த வருங்கால கணவர்.. பரபரப்பில் திரையுலகம்

    நடிகர் சோனு சூட்

    நடிகர் சோனு சூட்

    அவர்களுக்கு நடிகர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி வருகின்றனர். பாலிவுட் நடிகரான சோனு சூட் ஏராளமான பேருந்துகளை ஏற்பாடு செய்து புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி வருகிறார்.

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

    அவரை தொடர்ந்து பாலிவுட்டின் டாப் நடிகரான அமிதாப் பச்சனும் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி வருகிறார். கடந்த வாரம் சில தொழிலாளர்களை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 10 பேருந்துகள் மூலம் சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தார் அமிதாப் பச்சன்.

    மூன்று விமானங்கள்

    மூன்று விமானங்கள்

    இந்நிலையில் 500 புலம் பெயர் தொழிலளர்களை சொந்த ஊரான வாரணாசிக்கு விமானம் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறார். முதல்கட்டமாக இன்று காலை இண்டிகோ விமானம் மூலம் 180 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் மூலம் அனுப்பி வைக்க திட்டமிட்டார் அமிதாப் பச்சன்.

    மளிகைப் பொருட்கள்

    மளிகைப் பொருட்கள்

    ஆனால் அது சாத்தியப்படாததால் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். எஞ்சிய தொழிலாளர்களும் அடுத்தடுத்து விமானம் மூலம், மேற்குவங்கம், பீகார், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன், ஒரு லட்சம் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Amitabh bachchan has arranged three flights for migrant workers return home. 500 migrant works leaving by flight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X