Kamal haasan: கமல்ஹாசன் நடிப்பெல்லாம் நம்பறதுக்கு ரொம்ப கஷ்டம்.. அமிதாப் புகழ்ச்சி!
சென்னை: பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் கல்கி.
ப்ராஜெக்ட் கே என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு தற்போது கல்கி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனை பாராட்டிய அமிதாப் பச்சன்: நடிகர் பிரபாஸ் பாகுபலி படங்களை தொடர்ந்து பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். ஆனால் இந்தப் படங்களுக்கு பிறகு வெளியான அவரது படங்கள் எதுவும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்ததாக பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தில் பிரபாசுக்கு ஸ்ருதிஹாசன் ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் நடித்துவரும் படம் கல்கி. இந்தப் படத்திற்கு முன்னதாக பிராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் பிரபாசுடன் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். பிரபாசுக்கு வில்லனாகியுள்ளார் கமல்ஹாசன். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்திற்காக எந்த வில்லனுக்கும் இல்லாத வகையில், கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் சூட்டிங்கில் நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு பங்கேற்றார். அவர் படத்திற்காக 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் கமல்ஹாசனும் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. படத்திற்கு கல்கி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவில் அப்பாவிகள் வில்லனிடம் மாட்டிக் கொள்ள அவர்களை காப்பதற்காக பிரபாஸ் அவதாரம் எடுப்பதை போல அமைந்துள்ளது. மேலும் வீடியோவின் இறுதியில் பிராஜெக்ட் கே என்றால் என்ன என்று கேள்வி எழுப்பப்பட அதற்கு கல்கி என சொல்வதாக வீடியோ நிறைவடைகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், படத்தின் நடிகர்கள் குறித்து ஒவ்வொருவராக சுட்டிக் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் வீடியோ கால் மூலம் பேசிய நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு நம்புவதற்கு மிகவும் கடினமானது என்று கூறியுள்ளார். மேலும் அவர் அனைத்து நடிகர்களைவிடவும் மிகவும் உயர்வானவர் என்றும் கூறியுள்ளார். ராணா, பிரபாஸ் உள்ளிட்டவர்களும் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்து பேசினர்.


Click it and Unblock the Notifications











