ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் கொடுத்த அதிர்ச்சி.. 80 வயதில் இப்படி சொல்ல காரணம்.. ரசிகர்கள் கவலை!
மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். 80 வயதான நிலையிலும் இவரது சுறுசுறுப்பு இளம் நடிகர்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டில் ரஜினிகாந்துடன் இணைந்து வேட்டையன் படத்தில் லீட் கேரக்டரில் அமிதாபச்சன் நடித்திருந்தார்.
முன்னதாக பிரபாசுடன் இணைந்து கல்கி 2898 ஏடி படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் மிகச்சிறப்பான கேரக்டர் அமிதாபச்சனுக்கு அமைந்திருந்தது. படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகி வருகிறது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் அமிதாப் பச்சன்.

நடிகர் அமிதாப்பச்சன்: நடிகர் அமிதாப்பச்சன் 80 வயதை கடந்த நிலையிலும் சுறுசுறுப்பாக தமிழ். இந்தி. தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படம் மிகப் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் இவரது கேரக்டர் மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்தப் படம் 1000 கோடி ரூபாய்களை கடந்து வசூலித்த நிலையில் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதே போல கடந்த ஆண்டில் ரஜினிகாந்துடன் அமிதாப் வேட்டையன் படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் நேரடி தமிழ் படத்தில் நடித்திருந்தார். இந்த கேரக்டரும் வரவேற்பை பெற்றது.
அமிதாப் பச்சன் பதிவு: அமிதாப்பச்சன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் மிகவும் ஆர்வமுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் அமிதாப்பச்சன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் time to go அதாவது செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பதிவிட்டுள்ளது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. அவரது இந்த பதிவு வெளியானவுடன் ஏன் இது போன்று பதிவிட்டிருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதை அவரது பதிவின் கீழ் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். எங்கே செல்ல வேண்டிய நேரம் என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்புள்ள நிலையில் மற்றொருவர் கவலையுடன் என்ன ஆனது என்றும் கேள்வி கேட்டுள்ளார்.
ரசிகர்கள் ஷாக்: ரசிகர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில் அமிதாப் பச்சன் தன்னுடைய பதிவிற்கு விளக்கம் அளிக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் அமிதாப் பச்சன். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதைத்தான் தன்னுடைய பதிவில் அவர் தெரிவித்துள்ளாரா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதனிடையே 80 வயதை கடந்த நிலையில் அமிதாப்பச்சன் சினிமாவில் இருந்து விலக உள்ளாரா என்பது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அமிதாப் -ரஜினி நட்பு: விரைவில் இதற்கான பதில் மற்றும் விளக்கத்தை அமிதாப்பச்சன் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். வேட்டையன் படத்தில் இயல்பான நடிப்பை கொடுத்திருந்தார் அமிதாப் பச்சன். நடிகர் ரஜினிகாந்துடன் பல வருடங்களாக சிறப்பான வகையில் நண்பராக உள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக இந்திப் படங்களில் நடித்துள்ள நிலையில் வேட்டையன் படம் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இணைந்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் தமிழில் தன்னுடைய என்ட்ரியை துவங்கியுள்ளார் அமிதாப் பச்சன்.


Click it and Unblock the Notifications











