என் உடல் ஓய்வை கேட்கிறது.. சினிமாவுக்கு முழுக்கு போடும் உச்ச நடிகர்? அதிர்ச்சியில் திரையுலகம்!

மும்பை: உடல்நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து விலக பிரபல நடிகர் முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 1942 ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தார்.

சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே மும்பையில் வசித்து வரும் அமிதாப், தற்போது 77 வயதை எட்டியுள்ளார். 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

190 படங்களுக்கும் மேல்

190 படங்களுக்கும் மேல்

பாலிவுட்டை பொறுத்தவரை நாடு முழுவதும் அதிக ரசிகப் பெருமக்களை கொண்ட சில நடிகர்களில் அமிதாப் பச்சன் முக்கியமானவர். இதுவரை 190 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

உச்ச நடிகராக..

1969ஆம் ஆண்டு ‘சாட்ஹிந்துஸ்தானி' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் அமிதாப். சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்ற அமிதாப் பச்சன், உச்ச நடிகராக உயர்ந்தார்.

விளம்பரப் படங்கள்

விளம்பரப் படங்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகராக திகழ்ந்து வரும் அமிதாப் பச்சன் தற்போதும் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தொடர்ந்து விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன்.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வரவேற்பு நெகிழ்ச்சி

2 இந்தி படங்களில் நடித்து வருகிறார். பிரம்மஸ்திரா இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக அவர் பயணம் மேற்கொண்டபோது அவரை காண வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். படக்குழுவும் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தது. அதனை பார்த்து நெகிழ்ச்சியடைந்தார் அமிதாப் பச்சன்.

உடல் ஓய்வை கேட்கிறது

உடல் ஓய்வை கேட்கிறது

இந்நிலையில் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் அமிதாப் பச்சன். இதுகுறித்து பேசிய அவர், என்னுடைய உடல் தற்போது ஓய்வை தேடுகிறது. மனது ஒன்றை யோசிக்கிறது, ஆனால் உடல் ஒன்றை செய்கிறது. அதனால் ஓய்வு எடுத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

கொஞ்சம் தூக்கம் வேண்டும்

கொஞ்சம் தூக்கம் வேண்டும்

ஆனால் அமிதாப் பச்சன் இப்போது ஓய்வு பெறமாட்டார் என அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்திருக்கிறார். அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சொன்னது, கொஞ்சம் தூங்க வேண்டும் என்பதைதான், வேறொன்றும் இல்லை.

இன்னும் 20 ஆண்டுகள்

இன்னும் 20 ஆண்டுகள்

அவருடைய வார்த்தையில் வேறு அர்த்தத்தை கண்டுபிடிக்காதீர்கள். ஓய்வுபெற அவருக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் அவர் கேமராவுக்கு முன்பு வருவார் என்று கூறியுள்ளார்.

வைரலாகும் போட்டோஸ்

இதனிடையே மணாலியில் நடைபெறும் பிரமாஸ்திரா படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டுடன் நடுங்கும் குளிரில் பங்கேற்றிருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X