twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை.. அசத்தும் அமிதாப் பச்சன்!

    |

    சென்னை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

    Recommended Video

    Amitabh Wrong Belief! | Tweet | Rajinikanth Pawan Kalyan Tweet

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினம் தோறும் வருமானத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    சினிமாத்துறையிலும் தின ஊதியத்ததை நம்பியுள்ள பெரும்பாலான ஊழியர்கள் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். முன்னணி நடிகர்கள் பலரும் ஏழ்மையில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவி வருகின்றனர்.

    ஒரு மாத மளிகை

    ஒரு மாத மளிகை

    இந்நிலையில் பாலிவுட் மெகா ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் ஒரு லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதுவும் பாலிவுட் சினிமா தொழிலாளர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள சினிமா தொழிலாளர்களுக்கும் இந்த உதவி கிடைக்கும் படி செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.

    டிஜிட்டல் கூப்பன்கள்

    டிஜிட்டல் கூப்பன்கள்

    அவருடைய இந்த உதவிக்கு சோனி பிக்சர்ஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களும் உதவியாய் உள்ளன. பிரபல மளிகை கடைகள் மூலம் இந்த பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் கூப்பன்கள் வழங்கப்பட்டு மளிகைப் பொருட்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.

    ஒரு லட்சம் தொழிலாளர்கள்

    ஒரு லட்சம் தொழிலாளர்கள்

    திரை பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு அரிசி மூட்டைகள், மளிகைப் பொருட்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை வழங்கி தொழிலாளர்களுக்கு உதவி வரும் நிலையில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்ளை வழங்கி உள்ளார் அமிதாப் பச்சன்.

    நடிகர்கள் உதவி

    நடிகர்கள் உதவி

    பாலிவுட் நடிரான அக்ஷய் குமார், பிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதி வழங்கினார். இதேபோல் திரைத்துறையை சேர்ந்த பலரும் பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கும் பணம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Amitabh Bachchan provides provision for one lakh people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X