விக்ரம் படக்குழு உடன் இணையும் அமிதாப் பச்சன்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அதிரடியாக உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்
கமல்ஹாசன், விஜய் சேதுபதி ,பகத் பாசில் என மூவரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்திய அளவில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பாலிவுட்டில் ரீமேக்
மாநகரம் கைதி மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிகளாக கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது இந்திய அளவில் அதிகம் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் இவர் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி என இரண்டு திரைப்படங்களும் இப்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகிறது அதை தொடர்ந்து மாஸ்டர் படமும் பிரபல பாலிவுட் நடிகர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

கமல்ஹாசனின் கதாபாத்திரம்
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார் தனது கலையுலக குருவான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் முற்றிலும் ஆக்ஷன் கதை களத்தில் உருவாக்கி வருகிறார். மாஸ்டரில் விஜய்யை மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டி வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது கமல்ஹாசனை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்திலும் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் வகையில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் மிக வித்தியாசமாக அமைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்

பல கோடி ரூபாய்க்கு விற்பனை
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் என இந்திய அளவில் அனைவராலும் ரசிக்கக்கூடிய இரண்டு ஹீரோக்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இதுவரை இல்லாத அளவிற்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி உள்ளது

அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில்
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள சூடான தகவலின்படி விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடித்து வருகிறாராம். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தில் அமிதாப்பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான மகிழ்ச்சியை கொடுப்பது மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு உள்ளது.


Click it and Unblock the Notifications











