மாயாஜால தொடக்கம்.. ரஜினியுடனான சந்திப்பு குறித்து வில்லன் நடிகர் நெகிழ்ச்சி!
சென்னை : நடிகர் அமிதாஷ் பிரதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார் அமிதாஷ் பிரதான்.
தற்போது இவர் இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பரம்பொருள் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வேலையில்லா பட்டதாரி
தனுஷ் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி இந்த படத்தை எழுதி, இயக்கியவர் வேல்ராஜ் ஆவார். இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன்,அமிதேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். தனுஷின் 25வது படமான இப்படத்தை சொந்தமாக தயாரித்து வெளியிட்டிருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த நல்ல பெயரை பெற்றது.

அமுல் பேபி அமிதாஷ் பிரதான்
இந்த படத்தில் நடிகர் அமிதாஷ் பிரதான் வில்லனாக நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் இவரை பார்த்து அமுல் பேபி என தனுஷ் பேசும் வசனம் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது. தென்னிந்திய நடிகரான இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். அனிருத்தின் நெருங்கிய நண்பர் என்பதால், வேலை யில்லா பட்டாரி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஹீரோவாக அறிமுகம்
வி ஐ பி படத்திற்கு பின்னர் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அரவிந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பரம்பொருள் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில், காஷ்மிரா, சரத்குமார், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பரம்பொருள் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எஸ். பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

மாயாஜால தொடக்கம்
இந்நிலையில், நடிகர் அமிதாஷ் பிரதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, பிறந்தநாளின் சிறந்த தொடங்கம்.. இந்த நாளில் உங்களுடன் நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி. இந்த மாயாஜால தொடக்கத்திற்கும், எனக்கும் என் குடும்பத்திற்கும் நீங்கள் காட்டிய அரவணைப்புக்காக மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











