ஸ்டார் ஹோட்டலில் "அந்த" தொழில்.. பிரபல கவர்ச்சி நடிகை அதிரடி கைது.. மாடல் அழகியும் சிக்கினார்!
மும்பை: ஸ்டார் ஹோட்டலில் அப்பாவி பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரபல கவர்ச்சி நடிகை உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகை அம்ரிதா தனோவா, அன்லிமிடட் நாஷா, பர்வீன் பாபி, தி வேல்ர்டு ஆப் பேஷன் ஆகிய இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் ஆவார்.
தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக வியாழக்கிழமை இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பெண்கள் சப்ளை
இதையடுத்து அந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களை போல சென்றனர் போலீசார். அப்போது பெண்களை தொழில் அதிபர் உள்ளிட்ட பலருக்கு பெண்களை சப்ளை செய்யும் இருவரை போலீசார் சந்தித்தனர்.

பாலியல் தொழில்
இதனை தொடர்ந்து அங்கு பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதுகுறித்து தகவல் உறுதியான தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் ஹோட்டலில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

திடுக்கிடும் தகவல்
அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

இந்தி பட நடிகை
அதாவது இந்தி பட நடிகையான அம்ரிதா தனோவா, மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோர் ஸ்டார் ஹோட்டலுக்கு பெண்களை சப்ளை செய்தது தெரியவந்தது.

வழக்குப்பதிவு
இதனை தொடர்ந்து 32 வயது இந்தி நடிகை அம்ரிதா தனோவா, மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் தின்தோஷி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கும்பல் கைது
இந்திய தண்டனைச் சட்டத்தின் 370 (3) மற்றும் 34 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஜூகு பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் பாலியல் தொழில் செய்யும் கும்பலை பிடித்தனர்.

பரபரப்பு
மேலும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இந்திபட தயாரிப்பு நிறுவன மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











