மனைவியுடன் சேர்ந்து ஆட ஆசைப்பட்ட வடிவேல் பாலாஜி.. நிறைவேறாமலே போயிவிட்டார்.. நடிகர் உருக்கம்!
சென்னை: மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் சில ஆசைகள் நிறைவேறாமலே போய்விட்டது என சின்னத்திரை நடிகரான அமுதவாணன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்களும் வடிவேல் பாலாஜியின் நண்பர்களும் பங்கேற்றனர்.

திடீர் மரணம்
வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது என என பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவரது நகைச்சுவை, டைமிங் டயலாக்குகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவரது திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மரணம்
மாரடைப்பு, மூளையில் ரத்தக்கசிவு, கை கால்கள் முடக்கம், சிறுநீரக செயலிழப்பு என கடந்த 2 வாரங்களாக பெரும் கொடுமையை அனுபவித்துள்ளார் நடிகர் வடிவேல் பாலாஜி. நேற்று சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

அமுதவாணன்
வடிவேல் பாலாஜியின் மறைவை தொடர்ந்து அவர் குறித்த நினைவுகளை அவரது நண்பர்களான சக நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை பிரபலமான அமுதவாணன் மறைந்த வடிவேல் பலாஜி குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

மனைவியுடன் நடனம்
அதாவது விஜய் டிவியில் பிரபலமான அது இது எது நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

நிறைவேறாமல்
ஆனால் அவருடைய ஆசைகள் நிறைவேறாமலேயே வடிவேல் பாலாஜி மரணமடைந்து விட்டார் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இதேபோல் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து வேதனை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











