ஆனந்தராஜை விட ஆனந்தராஜி அசத்தல்..! நான் கன்னிபொண்ணாவே இருந்துட்டு போறேன்.. வேற லெவல்!

Recommended Video

Jackpot-Sneak Peek | ஆனந்தராஜை விட ஆனந்தராஜி அசத்தல்..! | Jothika , Revathi

சென்னை: ஜாக்பாட் படத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

ஜோதிகா நடித்த ஜாக்பாட் படம் நாளை திரைக்கு வருகிறது. குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜோதிகா உடன் நடிகை ரேவதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஜோதிகா உடன் நடிகை ரேவதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜாக்பாட் படத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

டபுள் ஆக்ஷன்

டபுள் ஆக்ஷன்

நடிகர் ஆனந்த்ராஜ், வில்லன், குணச்சித்திர வேடம் மற்றும் நகைச்சுவை கேரக்டர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஜாக்பாட் படத்தில் ஒரு ஆண் கேரக்டரிலும் ஒரு பெண் கேரக்டரிலும் நடித்துள்ளார் ஆனந்த்ராஜ்.

கன்னிப்பெண்ணாக

கன்னிப்பெண்ணாக

ஆனந்த் பெண் போலீஸாகவும், பெண் போலீஸின் தம்பியாகவும் நடித்திருக்கிறார். கல்யாணமாகாத கன்னிப்பெண்ணாக இருக்கும் ஆனந்த் ராஜிக்கு அவரது தம்பியாக உள்ள ஆனந்த்ராஜ் மாப்பிள்ளை தேடுவதாக உள்ளது.

பெண் வேடத்தில் ஆனந்த்ராஜ்

பெண் வேடத்தில் ஆனந்த்ராஜ்

மாப்பிள்ளை பிடிக்காத ஆனந்த்ராஜி நான் கன்னிப்பெண்ணாகவே இருந்துவிடுகிறேன் என்கிறார். பைக் காணோம் என கம்ப்ளையன்ட் கொடுக்க வருபவரையும் மாத்து மாத்தென மாத்துகிறார் பெண்ணாக வேடமிட்டிருக்கும் ஆனந்த் ராஜ்.

அசத்தியிருக்கிறார்

ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனை எனக்கு பிடிக்காது என பஞ்ச் டயலாக் விடுகிறார். இதுவரை பார்க்காத ஆனந்த் ராஜை ரசிகர்கள் இந்தப் படத்தில் பார்க்கலாம் போல. ஒரு சில காட்சிகளிலேயே மனுஷர் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X