Vijay Political Entry: விஜய் அரசியல் வருகை.. நடிகர் ஆனந்தராஜ் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தளபதி விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆனந்த் ராஜ் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அண்மையில்,10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தியது. அவரது அரசியல் பிரவேசம் குறித்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்த்தது.

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற வாதங்களை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் முன்வைத்து வருகின்றனர்.
நடிகர் ஆனந்த் ராஜ் பேட்டி: இது குறித்து பேட்டி அளித்துள்ள நடிகர் ஆனந்த் ராஜ், நடிகர் விஜய் வியாபார ரீதியாக அவர் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இவர் லியோ வெற்றி விழாவில் பேசியதை நான் பார்த்தேன். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான், புரட்சித் தலைவர் என்றால் அது எம்ஜிஆர் தான், நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி தான் என்று பேசி இருந்தார். இப்படி அவர் பேசியதற்கு முதலில் தான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் அவர்களின் பட்டம் அவர்களிடம் இருக்க வேண்டும்.
கடுமையாக உழைக்க வேண்டும்: சினிமாவில் அவர் தான் நம்பர் ஒன், பல முயற்சிகளை தாண்டி இவரை இந்த இடத்தில் அவரின் அப்பா கொண்டு வந்து இருக்கிறார். விஜய்யும் பல கஷ்டத்தை தாண்டி இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இதனால், அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரின் சொந்த விருப்பம், ஆனால், அரசியலுக்காக அவர் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.
மக்கள் செல்வாக்கு இருக்கு: ஒரு நடிகருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கும் போது அவர்களின் அடுத்த கட்டம் அரசியல் தான். இதையேத்தான் ரஜினிகாந்த், விஜய்காந்த், கமல் என அனைவரும் செய்தார்கள். இப்படி கலைத்துறையில் இருந்தவர்கள் தான் பின் நாளில் அரசியலுக்கு சென்றார்கள். இருந்தாலும் விஜய் அரசியல் வருகை குறித்து என்னால் உடைத்துப்பேச முடியாது, இதுகுறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











