‘அடங்கொப்பன் தாமிரபரணில தலை முழுக...’ டிவிட்டருக்கு வந்த வில்லன் நடிகருக்கு வித்தியாசமான வரவேற்பு

நடிகர் அனந்த்ராஜ் டிவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளார்.

சென்னை: நடிகர் ஆனந்தராஜ் புதிதாக டிவிட்டரில் இணைந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பை வித்தியாசமாக அளித்து வருகின்றனர்.

80, 90களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லனாக வலம் வந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ். தற்போது காலத்திற்கு தக்கபடி மாறிக் கொண்ட அவர், காமெடி கலந்த வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் டிவிட்டரில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார். சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் நேரடியாக மக்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் அவர் டிவிட்டரில் இணைந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

ஆதரவு தேவை:

தனது முதல் பதிவாக, ‘சினிமா ரசிகர்களுக்கு வணக்கம் கடைசியாக நானும் டுவிட்டர் உலகத்துக்குள் நுழைந்துவிட்டேன். ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்' என அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவைத் தொடர்ந்து ஆனந்தராஜுக்கு டிவிட்டர்வாசிகள் தங்கள் வரவேற்பை வித்தியாசமான முறையில் அளித்து வருகின்றனர்.

வரவேற்பு:

சிலர் அவரது பிரபல வசனமான, ‘அடங்கொப்பன் தாமிரபரணில தலை முழுக...' என்பதை பதிவாக வெளியிட்டுள்ளனர். சிலர் சீக்கிரம் பாலோ பண்ணுங்கடா என ஆனந்தராஜ் மாடுலேசனிலேயே பதிவிட்டுள்ளனர்.

நீங்களுமா சார்?

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகவும் பிடித்த டெம்ப்ளேட்டுகளில் ஒன்றான நானும் ரவுடிதான் பட காட்சியை வெளியிட்டு, 'என்னங்க சார் நீங்களும் டிவிட்டருக்கு வந்துட்டீங்களா?' எனக் கேட்டுள்ளார் இந்த ரசிகர்.

போலி கணக்கா?

சிலர் இது ஆனந்தராஜுடைய டிவிட்டர் பக்கமே இல்லை. நேற்று டேனியல் பாலாஜி பெயரில் இதே போன்று போலி கணக்குத் துவங்கப்பட்டது போல், இன்று ஆனந்தராஜ் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

பிரச்சினை ரெடி:

இப்படியாக இது ஆனந்தராஜுடைய உண்மையான பக்கம் தானா, அல்லது போலியானதா என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில், சிலர், ‘#Gobackmodi-யை பிள்ளையார்சுழியாக போட்டு ஆட்டத்தை ஆரம்பியுங்கள்' என அவரை பிரச்சினையில் கோர்த்துவிட முயற்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X