மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
சென்னை: மனிதாபிமான செயல்பாடுகளுக்காக நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் உட்பட சில படங்களில் நடித்தவர் பாலா.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார்.

ராயல் அமெரிக்கன்
இயக்குநர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் துறைகளில் செய்த சாதனை மற்றும் சேவைகளை மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்.

டாக்டர் பட்டம்
நடிகர் பாலா கலைத்துறையை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு மனிதாபிமானமிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கவுரவ டாக்டர் பட்டம் இதற்கு முன்பு வட இந்தியாவில் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தற்போது நடிகர் பாலாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன்
இதையடுத்து ஜன-24 ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பாலாவை கவுரவிக்க இருக்கிறார். கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலா, தனது 'நடிகர் பாலா தொண்டு நிறுவனம்' மூலமாக பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக இந்த கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைத் தத்தெடுத்துள்ளார்.

பெரிய அங்கீகாரம்
இந்த டாக்டர் பட்டம் கிடைத்தது பற்றி பாலா கூறும்போது, 'யாருமே நூறு வயது வரை வாழப்போவது கிடையாது. நாலு பேருக்கு நம்மால் நல்லது செய்ய முடியும் என்பதற்கு எனக்கு கிடைத்துள்ள பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். இப்போது என் பொறுப்பு இன்னும் கூடுதலாகி இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











