நான் ரொம்ப கோவக்காரன்.. தேஜுவின் அன்பு என்னை மாற்றியது.. நடிகர் அன்புதாசன்

சென்னை : நான் ரொம்ப கோவக்காரன் தேஜுவின் அன்பு என்னை மாற்றி இருக்கிறது என்று நடிகர் அன்புதாசன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வருபவர்களில் அன்புதாசனும் ஒருவர். அவர் ஒரு நடிகர், திரைக்கதை எழுத்தாளர், மேலும் பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார். ஹிப்-ஹாப் ஆதி, விவேக் போன்ற தமிழ் சினிமா துறையில் புகழ்பெற்றவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

actor anbuthasan theju interview

'மீசைய முருக்கு' திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி பல விமர்சகர்களுக்கும் மத்தியில் பலரின் பாராட்டை பெற்றார். யோகி பாபு மற்றும் நயன்தாரா நடித்த "கோலமாவு கோகிலா" திரைப்படத்தில் தனது நகைச்சுவையால் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த படம் அவருக்கு மேலும் வெற்றியை பெற்றுத் தந்து. இதையடுத்து இவருக்கு தற்போது பல வாய்ப்புகள் வந்துள்ளன.

இவர் நடித்த மீசையமுருக்கு,கோலமாவு கோகிலா ,ஜோம்பி மற்றும் ஆதித்யா வர்மா ஆகிய படங்களிலும் இவர் இவருக்கு முக்கிய கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது .

சினிமாவில் ஒரு புறம் நடித்து கொண்டே மறுபுறம் பிளாக் சீப்பில் வீடியோக்களை இயக்குவது அதில் நடிப்பது என்று பணியாற்றி வருகிறார். மேலும் பிளாக் சீப்பில் ஆகா கல்யாணம் தொடரை தொடர்ந்து கல்யாண சமையல் சாதம் தொடருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளது.

actor anbuthasan theju interview

அன்புதாசன் பிளாக் சீப் சேனல் ஸ்மைல் சேட்டையாக இருக்கும் போதே "லவ் ஆல் வித் அன்பு" என்ற தொடரில் நடித்திருந்தார். அதில் தான் மிக பெரிய அளவில் பிரபலமடைந்தார். அதை போல ஒரு காதலராக அன்பு நடித்து வரும் தொடர் தான் இந்த கல்யாண சமையல் சாதம் .

ஆகா கல்யாணம் இணைய தொடர் மிக பெரிய வெற்றி அடைந்தது அதற்கு நன்றி தெரிக்கும் விதமாக பிளாக் சீப் குழு ஆகா கல்யாணம் கொண்டாட்டம் என்று விழா நடத்தி மக்களையும் ரசிகர்களையும் விழாவிற்கு அழைத்து நன்றி தெரிவித்தனர். அதே போல கல்யாண சமையல் சாதமும் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

அன்புதாசன் மற்றும் தேஜு சமீபத்தில் கல்யாண சமையல் சாதம் தொடருக்காக அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டனர். தேஜு மற்றும் அன்பு இருவரும் மிகவும் குறும்புதனம் மிக்க நண்பர்கள் அவர்கள் இருவரும் இணைந்து இந்த தொடரில் ஒப்பந்தமானது மிக பெரிய மகிழ்ச்சி என்று தெரிவித்து கொண்டனர் .

மேலும் அன்புதாசன் கூறுகையில் நான் மிக பெரிய கோவக்காரன் பிளாக் சீப் குழு என்னதான் நகைச்சுவை கிண்டல் நிரைந்த குழுவாக இருந்தாலும் நான் சூட்டிங்கில் இருக்கும் போது, யாரும் என்னை கிண்டல் செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்தார் . மேலும் தேஜுவுக்கு நான் கோவப்படுவது பிடிக்காது அதனால் அவள் பல முறை கோவப்பட வேண்டாம் என அறிவுரை கூறி இருக்கிறாள். தேஜுவின் அன்பு என்னை மாற்றி இருக்கிறது இப்போ நான் அவ்வளவு கோவப்படுவது இல்லை என்று தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X