என் தாய் சேயாகிறாள்.. மருத்துவமனையில் காமெடி நடிகரின் அம்மா!

சென்னை : நடிகர் ஜெகனின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துணை நடிகரும் தொகுப்பாளருமான நடிகர் ஜெகன் விஜய் டிவியில் 'கடவுள்பாதி மிருகம்பாதி' என்ற நிகழ்ச்சியை வித்தியாசமான கெட்டப் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் வெள்ளித்திரையில் நுழையும் வாய்ப்பு கிடைத்து. இந்த வாய்ப்பை ஜெகன் சரியாக பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரை,வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.

நடிகர் ஜெகன்

நடிகர் ஜெகன்

நடிகர் ஜெகன் விஜய் தொலைக்காட்சியில் கடவுள்பாதி மிருகம்பாதி, ஜவ்வு மிட்டாய் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளர் என பெயர் எடுத்தார். 2005 ஆம் ஆண்டு பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சத்தம் போடாதே, ஓரம் போ, பொறி போன்ற படங்களில் நடித்தார்.

அயன் படத்தில்

அயன் படத்தில்

2009ம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்திருந்தார். பல நாட்கள் திரையரங்கில் ஓடி இத்திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜெயன் பல படங்களில் கமிட்டாகினார். தொடர்ந்து, பையா, கோ, வல்லினம், வில் அம்பு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை

சின்னத்திரை, வெள்ளித்திரை

கடைசியாக நடிகர் பிரபு தேவா நடித்த பொய் கால் குதிரை படத்தில் நடித்திருந்த ஜெகன், தற்போது பல்லு படாம பாத்துக்கோ என்கிற படத்தில் நடித்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வெள்ளித்திரை மட்டுமில்லாமல் விஜய் டிவியிலும் ரன் பேபி ரன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

என் தாய் சேயாகிறாள்

என் தாய் சேயாகிறாள்

ஜெகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாயார் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,என் தாய் சேயாகிறாள், உடல் நலம் குறைந்நு எங்களை ஈன்றவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்... ஏதுமறியா குழந்தைப்போல் உறங்குகிறாள்... எங்களை ஈன்றபோது எத்தனை இரவுகள்... இப்படிதானே கவலை தோயத்த அக்கறையுடன் எங்களை கவனித்திருப்பாய். இந்த ஓர் இரவில் என் நன்றி கடனை திரும்ப தர இயலாது என்பதை எண்ணி கூனிப்போகிறேன்... உன் நலம் வேண்டி என் சிவனை வேண்டுகிறேன். என பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, ரசிகர்களும் அவரின் தாயார் நலம் பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X