TVK Vijay: நேற்று நாற்காலியைத் தூக்கிய விஜய் சேதுபதி.. இன்று விஜய்க்கு என்ன சொல்லி இருக்காரு பாருங்க
சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் களமிறங்கப்போகின்றேன் என, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி தொடங்கிய தினத்தில் அறிவித்தார். மேலும் இது அவரது ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியையும் மறுபுறம் அதிர்ச்சியையும் கொடுத்தது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என ஏற்கனவே தெரிவித்து வந்த ஆசைப்பட்டு வந்த விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் விஜய்யின் டை-ஹார்ட் ரசிகர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. இதனால் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்தை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடினர். இவரது நடிப்பில் வெளியாகவுள்ள கடைசிப் படமான தளபதி 69க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய் கட்சியின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினை அறிவித்தபோது உலகநாயகன் கமல்ஹாசன் தொடங்கி பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பின்போது விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கோட் படத்தின் முதல் பாடலில் கூட, ' உன் பார்ட்டிக்குத்தான் என் வாக்கு' என வரிகள் வருவதைப்போலும் அது இரண்டு அர்த்தங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்தது.

விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கட்சி தொடங்கினாலும் அதன் பின்னர் நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. மேலும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல்தான் தங்களது நோக்கம் எனவும் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் விஜய்யை நோக்கி பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக கொள்கை என்ன என்ற கேள்வி அதிகமாகவும் அழுத்தமாகவும் முன்வைக்கப்பட்டது.
கொள்கைத் திருவிழா: இப்படியான நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டினை கொள்கைத் திருவிழாவாக விஜய் அறித்துள்ளார். இதனால் பலருக்கும் இந்த மாநாட்டின் மூலம் விஜய் பதில் அளிக்கப்போகின்றார் என்ற ஆவல் எழுந்துள்ளது. காலையில் இருந்தே மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக வந்து கொண்டு உள்ளனர்.

விஜய் சேதுபதி: இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்க்கும் அவரது கட்சியின் தொண்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,. தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்' என குறிப்பிட்டுள்ளார். இன்று மாநாடு நடைபெறவுள்ள நிலையில், விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாற்காலியை எடுத்துவந்து சில விஷயங்களைப் பேசினார். அதாவது, ' அவரவருக்கான நாற்காலியை அவரவர்தான் தூக்கவேண்டும்' எனக் கூறினார்.
மறைமுகமாக: இந்நிலையில் இன்று விஜய்க்கு மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதால், விஜய் தனக்கான அரசியல் அரியணையை தானே அமைத்துக் கொள்ளும் முயற்சியில் உள்ளார் என மறைமுகமாகக் கூறிவிட்டு, இன்று அவருக்கு வாழ்த்துகளும் கூறுகின்றார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் சேதுபதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











