கடுமையான உடற்பயிற்சி.. கட்டுக்கோப்பான உடலுக்கு ஆசைப்பட்ட நடிகர் மாரடைப்பால் மரணம்!

சென்னை: பெரும்பாலான நடிகர்கள் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டும் என ஆசைப்படுகின்றனர். இதற்காக இரவு பகல் என பார்க்காமல் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகின்றனர். இப்படி இவர்கள் செய்யும் கடுமையான உடல் பயிற்சியே இவர்களின் உயிரை காவு வாங்குவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. கடுமையான உடற்பயிற்சி செய்யும் பிரபல நடிகர் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

41 வயதே ஆன பாடி பில்டர் வரீந்திர் குமன், 2023 ஆம் ஆண்டு சல்மான் கான் நடித்த 'டைகர்-3' படத்திலும், 2014 இல் 'ரோர்: டைகர்ஸ் ஆஃப் சுந்தர்பன்ஸ்', 2019 இல் 'மர்ஜாவான்' என பல இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளியான 'கபடி ஒன்ஸ் அகெய்ன்' என்ற பஞ்சாபி படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆறடி இரண்டங்குல உயரமுள்ள குமன், 2009 இல் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றவர். மிஸ்டர் ஆசியா போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.

Actor Death
Photo Credit:

திடீர் மறைவு: "vegetarian bodybuilder" என அழைக்கப்படும் வரீந்திர் குமன் ஜலந்தரில் வசித்து வந்தார். உடற்தகுதியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை திடீரென இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவரின் மேலாளர், கடந்த சில நாட்களாகவே அவருக்கு தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார் என்றார். அவரின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆன்மா சாந்தி அடையட்டும்: மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வீரேந்திர குமன், "பஞ்சாபின் "பஞ்சாபின் பெருமை, இந்தியாவின் 'ஹீ-மேன்' வரீந்திர் குமன் மறைவு நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தனது கடின உழைப்பு மற்றும் சைவ வாழ்க்கை முறை மூலம் உடற்தகுதி உலகில் புதிய தரங்களை நிர்ணயித்தவர். அவரது வாழ்க்கை எப்போதும் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ பர்கட் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல நடிகரும் பாடி பில்டருமான வரீந்திர் சிங் குமன் மாரடைப்பால் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர் ஒரு பக்தியுள்ள சைவர். ஒழுக்கம் மற்றும் நேர்த்தியுடன் தனது உடலை உருவாக்கினார்.இந்த இழப்பை தாங்கிக் கொள்ள அவரது குடும்பத்திற்கு இறைவன் பலத்தை தரட்டும், அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X