இப்படி விசாரிச்சா உலகத்துல பெண்டிங் கேஸே இருக்காது.. சுச்சியை பங்கம் பண்ணிய பிரபலம்!
சென்னை: பிக்பாஸின் நேற்றைய கோர்ட் டாஸ்க்கில் சுச்சி நீதிபதியாக தீர்ப்பு வழங்கியதை பார்த்த நடிகரும் டான்ஸ மாஸ்டருமான சதீஷ் மரண கலாய் கலாய்த்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை தீர்க்கும் வகையில் விவாத மேடை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்து.
இதில் சுச்சி ஒரு சார்பாக குறிப்பாக பாலாஜிக்கு ஆதரவாக இருந்தது பச்சையாக தெரிந்தது. அவரது விசாரணையும் அவரது நடவடிக்கையும் எரிச்சலை ஏற்படுத்தியது.

கையை தூக்க சொல்லி
வாதிகளை கையைத் தூக்க சொல்லி கருத்துக்கணிப்பு நடத்தி தீர்ப்பு வழங்கினார் சுச்சி. அதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கும் முறையை நாங்கள் பார்த்ததே இல்லை என்றும் சுச்சியை கழுவி கழுவி ஊற்றினர்.

பிக்பாஸே சிரித்திருப்பார்
இந்நிலையில் பிரபல நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதீஷ், சுச்சியை படுபங்கமாக கலாய்த்துள்ளார். சுசித்ரா தீர்ப்பு வழங்கியதை பார்த்து பிக்பாஸே சிரித்திருப்பார் என நக்கல் அடித்துள்ளார்.

தீர்ப்பு கொடுக்க தெரியலயேம்மா?
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சுத்தியல் பயன்படுத்த தெரியுது. கோர்ட்ல ஒழுங்கா பிஹேவ் பண்ண சொல்ல தெரியுது.. ஜட்ஜ் காஸ்ட்யூம் பண்ண தெரியுது.. ஜட்ஜ்மெண்ட் கொடுக்க தெரியலயேம்மா?

பெண்டிங் கேஸே இருக்காது
கணக்கு எடுத்து தீர்ப்பு சொன்னா, இந்த உலகம் முழுக்க ஒரு கோர்ட்டில் கூட பெண்டிங் கேஸே இருக்காது.. பிக்பாஸ் நீங்க சிரிச்சீங்களா இல்லையா.. இவ்வாறு பதிவிட்டு சுச்சியை துவம்சம் செய்திருக்கிறார்.

இரிட்டேட் செய்தபோதும்
அதேநேரத்தில் ஆரியை பாராட்டி டிவிட்டியிருக்கிறார் சதீஷ். ஆரி இன்னமும் மரியாதையாகதான் பேசிக் கொண்டிருக்கிறார். பாலா அவரை இரிட்டேட் செய்த போதும் அவர் மரியாதை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆரி குட் குவாலிட்டி என தெரிவித்துள்ளார்.

நடிச்சுதான் காட்டினார்
அவருடைய மற்றொரு பதிவில் ஆரி நடிச்சுதான் காட்டினாரு சாம் உங்களை சொல்லல.. நீங்கள் ஏன் அதை தவறாய் எடுத்துக்கறீங்க.. அவர் தெளிவாக சொன்னார் வார்த்தைகள் பிரச்சனையில்லை அதை சொல்லும் விதத்தில்தான் இருக்கிறது.

அதெல்லாம் ரொம்ப ஓவர்
அது ஆக்டிங் சாம்.. வந்துட்டான் பிக்பாஸ் வீட்டுக்குன்னு சொன்னதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஆரி எல்லோரையும் மதிக்கிறார்.. என்று கூறியுள்ளார். மேலும் பாலா குறித்தும் டிவிட்டியுள்ளார் சதீஷ், அதில் பாலா நோ கமெண்ட்ஸ், நீங்கள் ஆட்டத்தை உருவாக்கினீர்கள் ஆனால் ஆட்டத்தை மறந்துவிட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











