Pawan Kalyan: மீண்டும் சூட்டிங் கிளம்பிய பவன் கல்யாண்.. அட என்னப்பா இப்படி சொல்லியிருக்காரு!

ஐதராபாத்: நடிகர் பவன் கல்யாண் பல ஆண்டுகளாக தெலுங்கில் முன்னணி நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்துள்ளவர். கடந்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவரது ஜனசேனா கட்சி சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. போட்டியிட்ட இடங்களில் வெற்றியும் பெற்றது.

இதையடுத்து ஆந்திராவின் துணை முதலமைச்சராக மாறியுள்ளார் பவன் கல்யாண். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக தன்னுடைய துணை முதலமைச்சருக்கான பணிகளில் இவர் பிஸியாக இருந்ததால் முன்னதாக இவரது நடிப்பில் உருவாகி வந்த படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் தற்போது ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

pawan kalyan hari hara veera mallu movie ustad bhagat singh movie

நடிகர் பவன் கல்யாண்: தெலுங்கு திரையலோகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல ஆண்டுகளாக வலம்வந்து கொண்டிருப்பவர் பவன் கல்யாண். அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடனும் முன்னணி தயாரிப்பாளர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வந்த பவன் கல்யாணுக்கு ஆந்திராவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி போட்டியிட்டது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு, வெற்றி பெற்றார் பவன் கல்யாண்.

மீண்டும் சூட்டிங்: இதையடுத்து பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக துணை முதல்வராக பிஸியாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்த பவன் கல்யாண், தற்போது தான் நடிக்காமல் நிறுத்தி வைத்திருந்த படங்களின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக அவர் நடிப்பில் ஓஜி, ஹரிஹர வீர மல்லு, உஸ்தாத் பகத்சிங் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்த படங்களை முடித்துக் கொடுக்க களமிறங்கியுள்ளார் பவன் கல்யாண். தற்போது ஹரிஹர வீர மல்லு படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்றுள்ளார்.

pawan kalyan hari hara veera mallu movie ustad bhagat singh movie

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா: அவர் எளிதாக ப்பிடிப்பிற்கு வந்து செல்லும் வகையில் விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் சில தினங்கள் பங்கேற்ற பவன் கல்யாண், தற்போது இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18, கேடி ஆகிய படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வரும் சூழலில் அடுத்தடுத்து சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. ஏஎம் ரத்தினத்தின் மகனான ஜோதி கிருஷ்ணா தெலுங்கிலும் ஆக்சிஜன், ரூல்ஸ் ரஞ்சன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

நான்கு ஆண்டுகளாக சூட்டிங்: இதனிடையே பவன் கல்யாண் படத்தின் ஷூட்டிங் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. பவன் கல்யாணின் அரசியல் பணிகள், இயக்குநர் மாற்றம் மற்றும் கொரோனா தாக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போன நிலையில் தற்போது முழு வீச்சில் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடுமையான அரசியல் பணிகளுக்கு இடையில் நீண்ட நாட்களாக தள்ளி வைக்கப்பட்ட பணிகளுக்கு நேரம் ஒதுக்கியுள்ளதாக பவன் கல்யாண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அவர் மீண்டும் தன்னுடைய படங்களில் நடிக்க துவங்கியுள்ளது குறித்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X