குத்தூசி கோவிந்தன்.. ராயன் படத்தை பங்கமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: தனுஷின் 50வது படமாக ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ் , துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

படத்தின் ஆரம்பத்தில் 14வயசு சிறுவனாக இருக்கும் தனுசுக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கச்சி குழந்தையாக இருக்கிறது. இந்த நேரத்தில் வெளியே போன அப்பா, அம்மா என்ன ஆனாங்க என்றே தெரியவில்லை. அப்போது தங்கச்சியை கடத்த ஒரு கும்பல் வர, ஹீரோ ஒரு கொலையை செய்துவிட்டு, தம்பி, தங்கச்சியுடன் சென்னைக்கு தப்பித்து வந்து கஷ்டப்பட்டு அவர்களை வளர்த்து ஆளாக்குகிறார்.

Dhanush Raayan Blue sattai maaran

ராயன்: இந்த நேரத்தில் இந்த ஊருக்கு மாற்றலாகி வரும் பிரகாஷ் ராஜ், ரௌடிகளை ஒழிக்க வேண்டும் என்று பிளான் போட்டு, இரண்டு ரௌடி கும்பலையும் தூண்டிவிடுகிறார். இந்த கும்பலிடம் தனுஷின் தம்பி மாட்டிக்கொள்கிறார். இதில தம்பியை காப்பாற்றுவதற்காக தனுஷ் கலத்தில் இறங்குகிறார். அதன் பிறகு என்ன ஆச்சு என்பதுதான் ராயன் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி படம் நிறைவாகத்தான் இருந்தாலும், இதோ ஒரு குழப்பம் இருந்தது.

ஒரே குழப்பம்: அதே போல இரண்டாம் பாதியில் படம் எதை நோக்கி செல்கிறது என்று தெளிவாக சொல்லப்படவில்லை. படத்தில் இரண்டு வில்லன்கள் இருந்தாலம், எஸ்.ஜே சூர்யா வில்லனா, சரவணன் வில்லனா இல்ல ஹீரோ கூட இருப்பவர் வில்லனா என்பதில் பெரிய குழப்பம் வந்து, படம் பாட்டுக்கு தறிகெட்டு ஓடாம நகர்ந்து போக ஆரம்பித்து, படம் எப்படா முடியும் என்று ஆகிவிட்டது.

கோவிந்தன் சரியாக இருக்கும்: படத்திற்கு ராயன் என்று பெயர் வைத்தற்கு பதிலாக கோவிந்தன் என்று பெயர் வைத்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும். ஏன்னா, படத்தில் வில்லனை பழிவாங்குகிறேன் என்று, கையில் ஒரு குத்தூசியை வைத்துக்கொண்டு அனைவரையும் குத்தி குத்தி கொலை செய்கிறார். இதனால், குத்தூசி கோவிந்தன் என் பெயர் வைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

இந்த படத்தை பத்தி படத்தின் இயக்குநர் தனுஷிடம் படத்தில் என்ன சொல்ல வரீங்க என்று கேட்டால், நிச்சயமா பதிலே இருக்காது. படத்தில் ஹீரோ நிம்மதியா இல்ல, வில்லன் நிம்மதியா இல்ல, படம் பார்க்கும் நாமும் நிம்மதியா இல்ல, இப்படி படம் முழுக்க அவலமா இருந்தால், படம் பார்ப்பவர்கள் எப்படித்தான் ரசிப்பது என்று ப்ளூ சட்டை மாறன் ராயன் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X