ராயன் ஹீரோவே ஏ.ஆர்.ரஹ்மான் தான்.. என்ன தனுஷ் இதெல்லாம்.. பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!

சென்னை: தனுஷின் 25வது படமான வேலையில்லா பட்டதாரி மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அடுத்த மைல்கல்லாக 50வது படத்தை நெருங்கிவிட்டார். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 50வது படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் இன்று வெளியான ராயன் படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சன்ததை பார்க்கலாம்.

ராயன் படத்தை தனுஷே எழுதி, இயக்கி நடித்து இருக்கிறார், ஒரு கிராமத்தில் தம்பி ,தங்கையோடு வாழ்ந்து வருகிறார் தனுஷ். அந்த கிராமத்தில் தங்கை துஷாராவை ஒரு கும்பல் கடத்திவிட இந்த ஊரே வேண்டாம் என்று வடசென்னைக்கு வந்து குடியேறுகிறார். இதன்பிறகு படம் வடசென்னை போல மாறிவிடுகிறது. வடசென்னை என்றாலே குத்து,வெட்டு, கொலை தான் போல. வடசென்னையில் நல்லவர்களே இல்லையா என நினைக்க தோன்றுகிறது. வெற்றிமாறன் இயக்கி வடசென்னை படத்திலும், ராயன் படத்திலும் ஒரே வன்முறையாகத்தான் இருக்கிறது.

Dhanush Raayan Bayilvan Ranganathan

ராயன் படம்: இன்டர்வெல்லுக்கு முன்னாடி கிராமத்து கதை, சின்ன வயசு தனுஷ் என்று படம் மிகவும் ஸ்லோவாக செல்கிறது. இதில் எஸ்.ஜே,.சூர்யா வில்லனாக நடித்து இருக்கிறார், இவரின் மனைவியா வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மற்றொரு வில்லனாக சரவணன் நடித்து இருக்கிறார். படத்தில் துரோகம்,கொலை பழிவாங்குவது என கதை செல்கிறது. அதன் பிறகு சரவணன் கொலையான பின்பு தான் படத்தில் ஒரு விறுவிறுப்பே வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஹீரோ: இந்த படத்தின் ஹீரோவே ஏஆர் ரஹ்மான் தான், அவரின் இசை படத்திற்கு பலமாக உள்ளது. தனுஷ், ஏஆர் ரஹ்மானின் காமினேஷன் பக்காவாக பொருத்தி உள்ளது. ராயன் படத்தில் சண்டை காட்சியும், பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்தி உள்ளது. இதில் துஷாரா விஜய்யன் தனுஷின் தங்கையாக நடித்துள்ளார். இதில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் யாரு கொலை செய்தார்கள் என்று தெரியாமல் படம் முழுக்க முழித்துக்கொண்ட இருக்கிறார்.

வடசென்னை இரண்டாம் பாகமா: சண்டை காட்சி பிடிக்கும், ஏ.ஆர்ரஹ்மான் பிடிக்கும் அப்படி என்றால், இந்த படத்திற்கு போகலாம், மற்ற படி இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கதை ஒன்றும் இல்லை. இப்படம் வடசென்னை இரண்டாம் பாகம் என்று சொன்னால் சரியாக இருக்கும், வடசென்னை படத்தில் இல்லாத ஒன்று, கிராமத்தில் இருந்து சென்னை வேலை தேடி வருவது, மற்ற படி, வடசென்னை படத்தில் இருக்கும் அனைத்துவிதமான காட்சிகளும் இந்த படத்தில் இருக்கிறது.

ஓவர் சென்டிமெண்ட்: அது மட்டுமில்லாமல் தங்கை சென்டிமெண்ட் ஓவராக இருக்கிறது. இதுபோன்று பல படத்தை நாம் பார்த்துவிட்டதால், ராயன் எடுபடவில்லை. குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றால் படத்தில் காமெடி இருக்க வேண்டும் இந்த படத்தில் ஒரு சின்ன காமெடி காட்சிக்கூடஇல்லை, ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சீரியசாகவே படம் செல்கிறது என பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X