twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்விழா கண்ட இயக்குநர்.. 400 படங்களுக்கு மேல் நடித்த நடிகர்.. மறக்க முடியாத மணிவண்ணன்!

    |

    சென்னை: இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனின் நினைவு நாளை முன்னிட்டு அவர் குறித்த சிறு செய்தி தொகுப்பு..

    இயக்குநர் மணிவண்ணன், இயக்குநர் பாரதிராஜாவிடம் கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட சில படங்களுக்கு உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

    பாரதிராஜாவிடம் பணியாற்றிய இரண்டு ஆண்டுகளிலேயே மொத்த வித்தையும் கற்றுக்கொண்டார் மணிவண்ணன். கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மணிவண்ணன்.

    இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை! இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை!

    50 படங்கள் இயக்கம்

    50 படங்கள் இயக்கம்

    தொடர்ந்து அவரது இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை படம் பெரும் வெற்றிப் பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தமாக 50 படங்களை இயக்கியிருக்கிறார் மணிவண்ணன். அவற்றில் 34 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.

    வில்லன், குணச்சித்திரம்

    வில்லன், குணச்சித்திரம்

    இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வெற்றிக் கொடி நாட்டினார் மணிவண்ணன். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

    கடைசி படம்

    கடைசி படம்

    சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், பிரபு, மோகன், மாதவன், விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். மணிவண்ணன் கடைசியாக இயக்கிய மற்றும் நடித்த படம் நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ. 1994 ஆம் ஆண்டில் அவரது இயக்கத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற அமைதிப்படை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவந்தது.

    மாரடைப்பால் மரணம்

    மாரடைப்பால் மரணம்

    இது மணிவண்ணன் இயக்கிய 50வது திரைப்படமாகும்.இந்தப் படம் வெளிவந்த சில நாட்களிலேயே நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் காலமானார். கடந்த 2013ஆம் ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மணிவண்ணன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்திருந்தார்.

    நினைவு நாள்

    நினைவு நாள்

    மணிவண்ணன் திரைத்துறை மட்டுமின்றி அரசியலிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். திராவிடக் கொள்கையில் தீவிரமாக இருந்த அவர், தமிழ் ஈழத்திற்காகவும் குரல் கொடுத்தார். மதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளிலும் தீவிரமாக செயல்பட்டார். இந்நிலையில் இன்று அவரது 7ஆம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    English summary
    Actor and director Manivannan's 7th death anniversary today. He has directed 50 films and acted ove 400 films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X