twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் தோன்றிய நடிகர் ராஜசேகர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி

    |

    Recommended Video

    பிரபல நடிகர் ராஜசேகர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி

    சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான ராஜசேகர் காலமானார்.

    'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரில் ஒருவர் இயக்குநர் ராஜசேகர். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தில் 4 ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார் ராஜசேகர். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் நடித்திருப்பார் ராஜசேகர்.

    மனசுக்குள் மத்தாப்பூ

    மனசுக்குள் மத்தாப்பூ

    ராபர்ட்டுடன் இவர் இணைந்து, ரபார்ட் - ராஜசேகர் என்ற பெயரில், 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

    சீரியல்களிலும்

    சீரியல்களிலும்

    பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் ராஜசேகர். சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வந்தார்.

    முக்கிய பொறுப்பு

    முக்கிய பொறுப்பு

    குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் இவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்து வந்தார் ராஜசேகர்.

    உயிர் பிரிந்தது

    உயிர் பிரிந்தது

    அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

    இரங்கல்

    இரங்கல்

    ராஜசேகரின் திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Actor and Director Rajasekar Passes away due to illness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X