சூர்யாவிற்கு அரசியல் வேண்டாம்.. அவர் செய்யும் நல்லதே போதும்.. பளிச்சுனு சொன்ன ஆர்.ஜே.பாலாஜி!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் கங்குவா. நவம்பர் 14ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள, இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்ஜே பாலாஜி,சூர்யாவிற்கு அரசியல் வேண்டாம், அவர் செய்யும் நல்லதே போதும் என்றார்.
நான் காலேஜ் படிக்கும் போது வந்த படம் காக்க காக்கா, அந்த படம் தான் சூர்யா சார் நடித்து நான் பார்த்த முதல் படம். அந்த படத்தை தொடர்ந்து, காக்க காக்கா, பிதாமகன்,ஆயுத எழுத்து,கஜினி இந்த நாலு படத்தையும் நான் காலேஜில் படிக்கும் போது பார்த்த படம். இப்படி திரையில் நான் பார்த்து வியந்த ஒருத்தர் தான் சூர்யா. இதே நேரு ஸ்டேடியத்தில் பல நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க இருக்கிறேன். தற்போது சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முக்கிய காரணம் சூர்யா தான், அவர் என் கதையை கேட்டு என்மீது நம்பிக்கை வைத்ததால் தான் இது சாத்தியமானது. அனைவரும் இணையத்தில் What are you cooking bro என்று கேட்குறீர்கள், பயங்கரமா மாஸா சமைத்து அடுத்த வருடம் தரப்படும் அதற்கு நான் கேரண்டி என்றார்.

அரசியல் வேண்டாம்: தொடர்ந்து பேசிய பாலாஜி,போஸ் வெங்கட் சார், சூர்யா சார் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னார். அவரின் இந்த கருத்தில் எனக்கு ஒரு ஒபினியன் இருக்கிறது. நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் இதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஒரு அரசியல்வாதி என்பது வெறும் தேர்தலில் நிற்பது மட்டுமில்லை. ஒரு தெருவில் மரம் விழுந்து, அதை நான்கு பேராக சென்று எடுத்துப் போட்டால் அவர் தான் அரசியல்வாதி, மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்று சின்ன சின்னதாக நல்லது செய்தால் அவரும் அரசியல்வாதிதான். அந்தவகையில் சூர்யா சார் அரசியல்வாதியாக மாறி ரொம்ப வருஷம் ஆகிறது. இந்த அரசியலே உங்களுக்கு போதும் சார், மாற்றம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்கவைத்து 25 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார் இந்த அரசியலே அவருக்கு போதுமானது என்று கங்குவா இசைவெளியீட்டு விழாவில் ஆர்ஜேபாலாஜி பேசினார்.

விறுவிறுப்பான ப்ரோமோஷன்: 38 மொழிகளில் பிரம்மாண்டமாக பொருட்செலவில் உருவாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்றது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள இந்த படத்தில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











