ஜெமினி பட நடிகர்.. பிரபல வக்கீல்.. நடிகர் துரைபாண்டியன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

சென்னை: ஜெமினி, ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் துரைபாண்டியன் காலமானார்.

நடிகர் விக்ரமின் ஜெமினி, சூர்யாவின் மவுனம் பேசியதே, மாதவனின் ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் துரைப்பாண்டியன்.

இவர் பிரபல கிரிமினல் லாயரும் ஆவார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.

மறக்க முடியாது

மறக்க முடியாது

ஜெமினி, ரன், மவுனம் பேசியதே ஆகிய படங்களில் சிறு வேடத்தில் தோன்றினாலும் அவரது கதாப்பாத்திரம் அழுத்தமானதாக இருக்கும். அவ்வளவு எளிதில் அவர் நடித்த கதாபாத்திரங்களை யாரும் மறந்துவிட முடியாது.

உடல் நலக்குறைவு

உடல் நலக்குறைவு

அதிமுகவிலும் துரைப்பாண்டியன் பொறுப்பில் இருந்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ருந்த துரைப்பாண்டியன் கடந்த திங்கள் கிழமை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உயிர் பிரிந்தது

உயிர் பிரிந்தது

அவருக்கு நுரையீரல் பிரச்சனை மற்றும் நீரிழிவு நோய் இருந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று பகல் 1 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

Recommended Video

ACTOR NANI EXCLUSIVE | MANI RATNAM SIR தான் என்னோட ONLINE TEACHER |V MOVIE | FILMIBEAT TAMIL
திரைத்துறையினர் இரங்கல்

திரைத்துறையினர் இரங்கல்

துரைப்பாண்டியனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. துரைப்பாண்டியனின் திடீர் மறைவு திரைத்துறையினர் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரைப்பாண்டியனின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X