twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படித்த முட்டாள்.. இவர்களால் நம் நாடு அழிவை நோக்கி செல்லும்.. இயக்குநரை விளாசி தள்ளிய எஸ்விசேகர்!

    |

    சென்னை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து காட்டமாக கருத்துக் கூறிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை, பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்வி சேகர் கடுமையாக விளாசியிருக்கிறார்.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய இந்துக்கள் உட்பட மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ்

    தமிழகத்திலும் போராட்டங்கள் பரவி வருகிறது. இந்நிலையில் சட்ட திருத்தம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

    அப்பன் வீட்டு சொத்து

    அப்பன் வீட்டு சொத்து

    அதாவது, இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வைப்போம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மறுப்பு சொல்வோம். அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு ‘நோ' சொல்வோம். இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என்று கூறியிருந்தார்.

    எஸ்வி சேகர் எதிர்ப்பு

    எஸ்வி சேகர் எதிர்ப்பு

    அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் விளாசியிருக்கிறார்.

    படித்த முட்டாள்

    இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, படித்த முட்டாளின் பார்வை தவறானால் நம் தாய் நாடு இவர்களை போன்றவர்களால் அழிவை நோக்கி செல்லும். அதை அனுமதிக்க முடியாது என காட்டமாக கூறியிருக்கிறார்.

    பீசா படத்தின் மூலம்

    பீசா படத்தின் மூலம்

    எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் வரவேற்பும் ஒருசேர எழுந்துள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய பீசா படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

    ரஜினியின் பேட்ட

    ரஜினியின் பேட்ட

    தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தனுஷின் நடிப்பில் அவர் இயக்கும் இரண்டு படங்கள் அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது.

    English summary
    Actor and Politician SV Shekar slams director Karthik Subburaj. Director Karthik Subburaj opposing CAB.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X