நடிகர் வெங்கட் சுபாவிற்கு கொரோனா...ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை : இந்தியாவில் கொரோனாவில் இரண்டாம் அலைக்கு நாள் ஒன்றிற்கு 4000 உயிர்கள் பலியாகி வருகின்றன. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது.

Actor and production controller Venkat subha critical in ICU due to COVID 19

கோலிவுட்டில் பல பிரபலங்கள் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். இன்று ஒரே நாளில் கோலிவுட்டையே அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அசுரன் படத்தில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் உயிரிழந்தார். இதே போன்று நடிகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜின் மனைவி 38 வயதான சிந்துஜா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் புகழ்பெற்ற தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தரும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது 40 ஆண்டு கால நண்பரும், நடிகரும், ப்ரோடக்ஷன் கன்ட்ரோலர் வெங்கட் சுபா, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாகவும், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் வெங்கட் பல படங்களில், டிவி சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ஹர்பஜன் சிங், லாஸ்லியா இணைந்து நடித்து விரைவில் வெளிவர உள்ள ஃபிரண்ட்ஷிட் படத்திலும் வெங்கட் நடித்துள்ளார். பெரும்பாலும் அப்பா வேடங்களிலும், சில படங்களில் வில்லன் வேடங்களிலும் வெங்கட் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X