twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதுமை காரணமாக..பழம்பெரும் நடிகரும் பாடகருமான பாப்புக்குட்டி பாகவதர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்

    By
    |

    கொச்சி: பிரபல பாடகரும் நடிகருமான பாப்புக்குட்டி பாகவதர் காலமானார். அவருக்கு வயது 107.

    Recommended Video

    SINGER VELMURUGAN | நம்ம மக்கள் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது | V-CONNECT | FILMIBEAT TAMIL

    கொச்சியை சேர்ந்தவர் பாப்புக்குட்டி பாகவதர். ஏழு வயதிலேயே நாடகங்களில் பாடி நடித்தவர் இவர்.

    பிறகு பெண் வேடத்தில் நாடகங்களில் தோன்றி பாடி, ஆடியவர். இதனால் அந்த காலத்திலேயே இவருக்கு புகழ் கிடைத்தது.

    நடுரோட்டில் நின்றுகொண்டு உங்கள் பெயர் சொல்லிக் கத்தினால்.. பிரபல நடிகையின் 'செம கடுப்பு' அனுபவம்! நடுரோட்டில் நின்றுகொண்டு உங்கள் பெயர் சொல்லிக் கத்தினால்.. பிரபல நடிகையின் 'செம கடுப்பு' அனுபவம்!

    அஞ்சு சுந்தரிகள்

    அஞ்சு சுந்தரிகள்

    தொடர்ந்து நாடகம், பாடல் என அசத்தி வந்த இவர், கேரள சேஹைல் என அழைக்கப்படுபவர். 1912 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பிறந்த பாப்புக்குட்டி பாகவதர், ஶ்ரீகுருவாயூரப்பன், ஷியாமாளா சேச்சி, அஞ்சு சுந்தரிகள், முதலாளி) உட்பட சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படம், பிரசன்னா (1950). இதில் அவர் பாடலும் பாடியுள்ளார்.

    சங்கர் மகாதேவன்

    சங்கர் மகாதேவன்

    பிரபல பாடகர் ஜேசுதாசின் தந்தை அகஸ்டின் ஜோசப்புடன் இணைந்து சில நாடகங்களில் நடித்துள்ளார். ஏராளமான படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். பல பாடல்கள் ஹிட்டாகி யுள்ளன. தனது 95 வயதில், மேரிக்குண்டொரு குஞ்சாடு என்ற மலையாள படத்தில், என்டடுக்கே வண்ணடுக்கும் என்ற பாடலை பாடி அசத்தினார். சங்கர் மகாதேவன், ரிமி டோமி, சுப்புலட்சுமியுடன் இணைந்து அவர் பாடிய இந்தப் பாடல் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது.

    முதுமை காரணமாக

    முதுமை காரணமாக

    இத்தனை வயதில் பாடல் பாடிய முதல் மலையாள பின்னணி பாடகர் என்ற பெயரையும் அவருக்கு இந்தப் பாடல் பெற்று தந்தது. இதுதான் அவர் பாடிய கடைசி பாடல். இதற்குப் பிறகு பாடவில்லை. கொச்சி அருகிலுள்ள பல்லுருட்டி என்ற ஊரில் வசித்து வந்த பாப்புக்குட்டி பாகவதர், முதுமை காரணமாக ஓய்வெடுத்து வந்தார்.

    இறுதிச்சடங்கு

    இறுதிச்சடங்கு

    இந்நிலையில் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது. மறைந்த பாகவதரின் மனைவி பேபி. இவர் ஏற்கனவே காலமாகிவிட்டார். மலையாள நடிகர் மோகன் ஜோஸ் இவர் மகன். இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் இவர் மருமகன். பாப்புக்குட்டி பாகவதர் மறைவை அடுத்து மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Read more about: singer பாடகர்
    English summary
    Actor and singer Pappukutty Bhagavathar passes away, He was 107
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X