அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல.. விவேக்கின் மேலாளர் நடிகர் செல்முருகனின் உருக்கமான பதிவு!

சென்னை: நடிகர் விவேக்கின் மேலாளரும் நடிகருமான செல்முருகன் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

Recommended Video

Cell Murugan First Post on Vivekh Demise | 'அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல'

நடிகர் விவேக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை மரணமடைந்தார்.

நம்பவே முடியவில்லை

நம்பவே முடியவில்லை

அவரது மறைவு தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இன்னமும் விவேக் நம்முடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை என தங்களின் சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

செல் முருகன் உருக்கம்

செல் முருகன் உருக்கம்

அந்த வகையில் நடிகரும் விவேக்கின் மேலாளருமான செல் முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை ஷேர் செய்துள்ளார். செல் முருகன் விவேக்குடன் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

பல படங்களில் இணைந்து..

பல படங்களில் இணைந்து..

வையாபுரி மூலம் நடிகர் விவேக்கிற்கு அறிமுகமான செல் முருகன், பின்னர் அவரிடமே மேலாளரானார். பல படங்களில் விவேக்குடன் இணைந்து சிறுசிறு காமெடி வேடங்களில் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உட்பட பல படங்களில் அவர்களின் நகைச்சுவை கூட்டணி பெரும் ஹிட்டானது.

கலங்க செய்த போட்டோ

கலங்க செய்த போட்டோ

நடிகர் விவேக்கையே முழுக்க முழுக்க நம்பியிருந்தார் செல் முருகன். விவேக்கின் இறுதிச்சடங்கிலும் கூட கூட்டத்தில் தொலைந்த குழந்தை திக்கற்று கதறுவதை போன்று கதறிக் கொண்டே இருந்தார் செல் முருகன். அவரின் கதறல் போட்டோக்கள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்தது.

நானும் போட்டுக்கொண்டேன்

நானும் போட்டுக்கொண்டேன்

கடைசியாக விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போது அவருடன் சேர்ந்து தானும் தடுப்பூசி கொண்டார். அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த செல் முருகன், நானும் என கேப்ஷன் கொடுத்திருந்தார்.

எனக்கு வேறு யாருமில்ல

எனக்கு வேறு யாருமில்ல

இந்நிலையில் நடிகர் செல் முருகன், அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல என்று ஒரு உருக்கமான பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,

ஓர் மரணம் என்ன செய்யும்
சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்
சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்
சிலர் RIPபுடன் கடந்த போவார்கள்
சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்
சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்
ஆனால் அண்ணா...
உண்மையான ஜீவன்
என் உயிர் தோழன்
என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண
காற்றில் கரைந்து விட்டாயே!
இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்!
இனி என் முருகனுக்கு யார்? துணை
விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்?
இனி அவனுக்கு
யார்? துணை..
யார்? துணை....
யார்? துணை...... இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

எப்பொழுதும் இருக்கும்

செல் முருகனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அவரோட ரசிகர்கள் நாங்க இருக்கோம் அண்ணா அவர் ஆத்மா சாந்தி அடையும்... அவர் அன்பும் உங்களுடன் எப்பொழுதும் இருக்கும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆசி உங்களுக்கு உண்டு

மற்றொரு நெட்டிசனான இவர், நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் விவேக் சார் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு. அவர் விட்டுவிட்டு சென்ற மிகுதி பணியை #greenkalamvivekh என்று தொடருங்கள் மரங்கள் நடுங்கள் அப்போது தான் நாம் சின்ன கலைவாணர் ஆத்மா ஷாந்தி அடையும் என செல்முருகனுக்கு தைரியம் கூறியுள்ளார்.

புரஃபைல் போட்டோ மாற்றம்

மேலும் செல் முருகன் விவேக்குடன் ஆரம்பத்தில் எடுத்த போட்டோவை தனது புரஃபைல் போட்டோவாக மாற்றியுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், விவேக் சார் எப்போதும் உங்களுடனே இருப்பார் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vivek vivekh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X