மகளை பற்றி தப்பா பேசியதற்கு.. ஆண்டவன் தண்டனை கொடுப்பான்.. பயில்வான் ரங்கநாதன் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில், நடிகராகவும், அதே நேரம் பத்திரிகை நிருபராகவும் பயணித்து வரும் பயில்வான் ரங்கநாதன், அரசியல் மற்றும் சினிமா விமர்சகராகவும் இருந்து வருகிறார். இவரது இளைய மகளுக்கு திங்கட்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.

நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை பேசி வரும் பயில்வான் ரங்கநாதனுக்கு பலவிதமான எதிர்ப்பு வரும் போதும், நான் உண்மையைத்தான் பேசுகிறேன், மக்களின் ஆதரவு எனக்கு இருக்கு என்று தொடர்ந்து அவ்வாறே பேசி வருகிறார். கடந்த மாதம், பிரபல நடிகை ஷகிலா பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பயில்வான் ரங்கநாதனிடம் அவருடைய மகள் ஒரு லெஸ்பியன் என்று தெரியுமா என குண்டை தூக்கி போட்டார் ஷகிலா.

Bayilvan Ranganathan shakila interview

இதை ஏற்றுக்கொள்ள மறுத்து, உடனே கோபத்தின் உச்சிக்கே சென்ற ரங்கநாதன், இப்படி பேச வேண்டாம் உங்கள் நாக்கு அழுகிவிடும், என்று வெறுப்போடு பேசினார். இதனால், அவரது மகள் குறித்து மோசமான கருத்துக்கள் பரவிய நிலையில், திங்கட்கிழமை அவரது வீட்டில் எளிமையான முறையில் அவரது மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதன் போட்டோக்களை பயில்வான் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

மகளை பற்றி தவறான தகவல்: மகள் திருமணம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான், என் மகளை பற்றி ஒரு நடிகை தகாத வார்த்தையை சொல்லிவிட்டார், அவரின் பெயரைக்கூட நான் சொல்லவிரும்பவில்லை. இதனால், என் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வருத்தப்பட்டார்கள். உடனே என் சம்மந்தி திருமணத்தை சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று சொன்னார். செப்டம்பர் 15ந் தேதி கல்யாணம் அதற்கு முன்பாக, திருப்பூரில் உள்ள வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் எங்கள் வீட்டில் உள்ளவர்களும், சம்மந்தி வீட்டில் உள்ளவர்களும் கலந்து கொண்டார்கள்.

மருமகன் சிவா: மாப்பிள்ளை சிவா என், மைத்துனரின் மகன் அதாவது என் மனைவியின் உடன் பிறந்த அண்ணனின் மகன் தான் அவர். ஏற்கனவே இருவரும் பேசி பழகினார்கள். இந்த விஷயத்தை என்னிடம் சொன்னதும். நான் மைத்துனரிடம் கலந்து பேசி திருமண தேதியை முடிவு செய்தோம். என் மருமகன் சிவா எம்பிஏ படித்து இருக்கிறார், என் மகள் பிகாம் படித்து இருக்கிறாள். இருவரும் ஐடியில் வேறு வேறு இடத்தில் வேலை செய்கிறார்கள்.

ஆண்டவன் பார்த்துப்பான்: இணையத்தில் பரவிய செய்தியால் குடும்பத்தினர் மிகவும் வருத்தப்பட்டனர். ஆனால், என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். நான் பத்திரிக்கை துறையில் இருக்கிறேன், இதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். நான் கெட்டதைபற்றி பேசியதால் நான் கெட்டவனாகி விடுவேனா. அந்த அம்மா என் மகளை பற்றி தவறாக பேசியதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியும். இப்படி அவர் பேசியதற்கான விளைவை அவர் அனுபவிப்பார். எனக்கு குடும்பம் இருக்கு, பேரன் பேத்தி இருக்கிறார்கள், அவர்களுக்கு? எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X