அர்ஜுனுக்கு பாடி டிமாண்ட் அதிகம்...சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
சென்னை : ஹீரோ,வில்லன் என கலக்கி வரும் நடிகர் அர்ஜுன் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்து உள்ளார்
தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் நடிகர் அர்ஜுன். இவரது ரசிகர்கள் இவருக்கு ஆக்ஷன் கிங் என்ற பட்டத்தை கொடுத்து அன்போடு அழைத்து வருகின்றனர்.
சுகந்திர தினத்தில் பிறந்த அர்ஜுன் நடித்த பெரும்பாலான படங்கள் தேசியபற்றை கூறும் திரைப்படங்களாகவே இவருக்கும்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன்
ஹீரோவாக நடித்தாலும் சரி, வில்லானாக நடித்தாலும் சரி அதில் நான் தான் மாஸ் என அட்டகாசமாக நடிப்பதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் வெளுத்து வாங்குவார். கதாநாயகனாக நடித்து வந்த அர்ஜுன் நெகட்டிவ் ரோலிலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

நிபுணன் படப்பிடிப்பில்
நடிகர் அர்ஜுன் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் நிபுணன். இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்,பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில், அர்ஜுனின் மனைவியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அது அந்த சமயத்தில் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

அர்ஜுன் மீது வழக்கு
மேலும், பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு தொடந்தார். இந்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் வரை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜுனை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

பாடி டிமாண்ட் அதிகம்
இந்த விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டி இப்போது, இணையத்தில் காரணமே இல்லாமல் டிரெண்டாகி வருகிறது. அந்த பேட்டியில், அர்ஜுனை பொருத்தவரை பாடி டிமாண்ட் அதிகம் உள்ளவர். படப்பிடிப்பின் போதும் அர்ஜுன் சில நடிகைகளிடம் அவ்வாறு தான் நடந்துக்கொள்வார். ஆனால்,நடிகைகளுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அவர்களுடன் பழகுவார்.

கட்டாயப்படுத்த மாட்டார்
அர்ஜுன் மதுஅருந்தும் பழக்கம் கொண்டவர்,ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் அவர் உளறியது இல்லை. சமீபத்தில் கூட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு கேம் ஷோவில் கலந்து கொண்டார். அப்போதும், படப்பிடிப்புக்கு மது அருந்திவிட்டுவந்ததாகவும், பல பிரச்சனைகள் நடந்ததாகவும் அந்த தனியார் டிவி புலம்பியது. ஆனால், அர்ஜுன் பெண்களின் விருப்பம் இல்லாமல் எந்த பெண்ணையும் அவர் கட்டாயப்படுத்த மாட்டார்

ரஞ்சிதா கதை வேறு
அதேபோல் ரஞ்சிதா சினிமாவில் இருந்து விலக்கியதற்கு அர்ஜுன் தான் காரணம் என்று சொல்வதில் துளியும் உண்மை இல்லை. நித்யானந்தாவுக்கும் ரஞ்சிதாவுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது அது ஊர் அறிந்த விஷயம். அதுமட்டுமில்லாமல், அர்ஜுன் மீது இதுவரை எந்த நடிகையும் பாலியல் புகார் கொடுத்தது இல்லை என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications