Andrea: முன்னாள் காதலர் அனிருத்தை வம்புக்கு இழுக்கும் ஆண்ட்ரியா?.. காதலர் தினத்தில் சிங்கிள் போஸ்ட்
சென்னை: நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான பிரபலமாக இருக்கிறார். ராவான கதாபாத்திரங்கள், லவ்லியான கதாபாத்திரங்கள் என எது கொடுத்தாலும் தனது அட்டகாசமான நடிப்பில், பலரையும் கவர்ந்தவர். இது மட்டும் இல்லாமல், பாடகியாகவும் ஜொலித்து வருகிறார். இவரது பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. காதலர் தினமான இன்று, ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கங்களில் தனது புகைப்படத்துடன் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அது அனிருத்தை சீண்டுவது போல் இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள்.
ஆண்ட்ரியா, தமிழ் சினிமா, மலையாள சினிமா என இரண்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர். இவரது கதாபாத்திரத்தேர்வு, ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பல நடிகைகளுக்குமே ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அவரது கதாபாத்திரங்கள் படத்தின் மைய்யமாகவோ அல்லது படத்தில் மிக முக்கியமானதாகவேதான் இருந்துள்ளது. ஒரு காட்சியில் நடித்தால், திரைக்கதை நகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், அந்தக் காட்சியில் நடிக்க சம்மதிப்பார்.

படத்திற்கு தேவை, என்றால், ஆடை இல்லாமல் நிர்வாணமாகக் கூட நடிக்கத் தயங்காதவர் ஆண்ட்ரியா. தைரியமான கதாநாயகிகளிலும் சரி, திரைக்கதை அறிவு கொண்ட கதாநாயகிகளிலும் சரி, ஆண்ட்ரியாவின் பெயர் என்றைக்கும் இருக்கும். பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க வேண்டும், என மிஷ்கின் சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நடிக்க சம்மதம் சொன்னவர். ஆனால் மிஷ்கின் நான் பார்க்கும் கலைப் பார்வையில் ரசிகர்கள் உங்கள் நிர்வாணத்தை பார்க்க மாட்டார்கள் எனக் கூறி, நிர்வாணக் காட்சிகள் இல்லாமல், படத்தை எடுத்து முடித்தார்.
அனிருத்: ஆண்ட்ரியா பல ஆண்டுகளுக்கு முன்னர், இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தார். இருவரும் ஒன்றாக பல பார்ட்டிகளுக்கு செல்வது, தனிமையில் சந்தித்துக் கொள்வது என தங்களது காதலை வளர்த்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து போனார்கள். அனிருத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம். அதாவது அனிருத்தை விட ஆண்ட்ரியா சுமார் 5 ஆண்டுகள் பெரியவர். இது தொடர்பாக அனிருத் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மேலும் பிரிவுக்கு காரணமே வயது வித்தியாசம் தான் எனவும் கூறினார்.

கமெண்ட்: இப்படியான நிலையில், காதலர் தினமான இன்று, ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, அதற்கு கேப்ஷன் இட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ஆண்ட்ரியாவின் காதல் குறித்து தெரிந்தவர்கள் ஆண்ட்ரியா அனிருத்தைத்தான் மறைமுகமாக விமர்சித்துள்ளார் எனவும் கூறி வருகிறார்கள்.
கேப்ஷன்: ஆண்ட்ரியா அந்த பதிவில், " ஒரு காலத்தில் நான் உன் காதலியாக இருந்தேன். ஆனால் நான் இப்போது சுதந்திரமாக உள்ளேன். மேலும், நானும் எனது ஆன்மாவும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது இதயம் எப்போதும் எனக்கானது " என பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











