இளையராஜாவின் இசை.. புகழ்ந்து தள்ளிய ஹிந்தி ஹீரோ.. ட்ரெண்டாகும் செம வீடியோ

சென்னை: இசைஞானி இளையராஜா இசையில் கடைசியாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. படமும், இசையும் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதேபோல் அந்தப் படத்துக்கு அடுத்ததாக தினசரி என்ற படத்துக்கு இசையமைத்தார். ஆனால் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில் இந்திய அளவி பிரபலமான நடிகர் அனில் கபூரின் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

இளையராஜா முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக ஆரம்பித்தனர். இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா.

Ilayaraaja Anil Kapoor

பெரும் போராட்டம்: சினிமாவுக்குள் நுழைந்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தாலும் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர் இளையராஜா. குறிப்பாக யாருக்கும் நடக்கக்கூடாத தாக்குதல் எல்லாம் இளையராஜாவுக்கு நடந்தது. ஏன் இன்னமும் ஒரு சிலர் அவர் மீது அந்தத் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சர்ச்சைகளும்: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர். பிரதமர் மோடி குறித்து அவர் கூறிய கருத்து, ராஜ்யசபா எம்.பி ஆனது என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டு செல்லும். அதேபோல் சில இயக்குநர்கள், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோருடனும் கருத்து வேறுபாடு எழுந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

பயோபிக்: அவரது இசையமைப்பில் கடைசியாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம், தினசரி ஆகிய படங்கள் வெளியாகின. அந்த இரண்டு படங்களில் விடுதலை 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தார்கள். அடுத்ததாகவும் இளையராஜாவின் இசையில் ஏராளமான படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரது வாழ்க்கை வரலாறும் படமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனில் கபூர் ட்வீட்: இந்நிலையில் பிரபல நடிகர் அனில் கபூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பல்லவி அனு பல்லவி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இருக்கும் ஒரு பாடலை பகிர்ந்து, "இளையராஜாவின் மெல்லிசை 42 ஆண்டுகளை கடந்தாலும் இன்னமும் அதேபோல் ஒலிக்கின்றன. 42 ஆண்டுகளை கடந்தாலும் பல்லவி அனு பல்லவியின் இசை காலத்தால் அழியாதது" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X