அப்போக்கூட மேக் அப்.. என்னா பிக்சர்.. ஸ்ரீதேவியின் ரேர் போட்டோவை ஷேர் செய்து அனில் கபூர் உருக்கம்!
சென்னை: நடிகை ஸ்ரீதேவியுடன் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வெரி ரேர் போட்டோவை ஷேர் செய்து பாலிவுட் நடிகர் அனில் கபூர் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார்.
Recommended Video
நடிகை ஸ்ரீதேவி, சிவகாசியில் உள்ள மீனாம்பட்டி கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் தனது 4 வயதில் கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
மூன்று முடிச்சு என்ற படத்தில் தனது 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அப்போது உச்சத்தில் இருந்த ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.

பெண் சூப்பர் ஸ்டார்
பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கேயும் தனது வெற்றி கொடியை பறக்கவிட்டார். தமிழகத்தில் இருந்து சென்று வடக்கில் உச்சம் தொட்ட நடிகை என்ற பெருமைக்குரிய ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்

இரண்டாவது திருமணம்
முதலில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை ரகசிய திருமணம் செய்து பிரிந்த ஸ்ரீதேவி, தனது தீவிர ரசிகரும் தயாரிப்பாளருமான போனி கபூரை 1996ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணம் போனி கபூருக்கும் இரண்டாவது திருமணம் தான்.

துபாய் பயணம்
பல எதிர்ப்புகளுக்கு நடுவில் போனி கபூரை திருமணம் செய்த ஸ்ரீதேவி ஜான்வி, குஷி ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். ஜான்வி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.

அனில் கபூர்
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்நிலையில் போனி கபூரின் சகோதரரும், நடிகருமான அனில் கபூர் தனது அண்ணி குறித்து டிவிட்டியிருக்கிறார். ஸ்ரீதேவியுடன் கர்மா, ஜன்பாஸ், லாம், பாம்பே டாக்கீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தோளில் இருந்தப்படி..
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அனில் கபூர் தனது அண்ணி ஸ்ரீதேவியுடன் படத்தில் நடித்த போது எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் ஸ்ரீதேவியை தோளில் தூக்கி வைத்தப்படி ஷாட்டுக்கு தயாராக இருக்கிறார் அனில் கபூர். அப்போது ஸ்ரீதேவி மேக் அப் மேனை அழைத்து டச் அப் செய்து கொள்கிறார்.

பர்ஃபெக்ஷனிஸ்ட்..
இந்த அரிய தருணத்தை போட்டோவாக க்ளிக்கியிருக்கிறார் கேமரா மேன். அந்த போட்டோவில் அவ்வளவு அழகாக இருக்கிறார் ஸ்ரீதேவி. அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த கையோடு, ஒரு திறமையான மனிதரால் இப்படி ஒரு போட்டோ எடுக்கப்படும் என்று அப்போது தெரியவில்லை. ஸ்ரீ ஜியின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததற்கு நன்றி ஸ்டிப் மெக்ரி.. அவர் எப்போதும் ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட்.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











