அச்சம் என்பது மடமையடா பட நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது.. ரசிகர்கள் மகிழ்ச்சி !
சென்னை : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையாட திரைப்படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்த நடிகை அஞ்சலி ராவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நாயகியாகவும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த அஞ்சலி ராவ் மலையாளத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
படத்தொகுப்பாளர் ஜோமின் மற்றும் அஞ்சலி ராவ் தம்பதியருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை கேட்ட இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலக அரங்கில் அடையாளம்
சமீபத்தில் வெளிநாடுகளில் பல்வேறு குறும்பட போட்டிகளில் போட்டியிட்டு பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வந்த "உணர்தல்" குறும்படம் அஞ்சலி ராவ் நடிப்பில், பாலாஜி எஸ் பி ஆர் இயக்கத்தில் உருவாகி தற்பொழுது உலக அரங்கில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுள்ளது.

சிம்புவின் தங்கையாக
இவ்வாறு மிகச்சிறந்த கதைகளையும் ,கதாபாத்திரங்களையும் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் நடிகை அஞ்சலி ராவ் தமிழில் பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் மனதை கொள்ளை கொள்ளும் பயணக் காதல் திரைப்படமாக உருவான "அச்சம் என்பது மடமையடா " திரைப்படத்தில் சிம்புவின் தங்கையாக மிகச் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை அஞ்சலி ராவ்.

துடிப்பான கதாநாயகியாக
சில ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் புதிய படக்குழுவால் புதிய முயற்சியுடன் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்ற "பீச்சாங்கை" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை அஞ்சலி ராவ், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பல விருதுகளை வென்று வந்த 'சில சமயங்களில்" திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கணவர் ஜோமின்
இவ்வாறு தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் ஹீரோயினாக இருந்தாலும், குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது முழு ஈடுபாட்டை கொடுத்து அதில் தனது சிறந்த நடிப்பை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி ராவ். சந்தானம் நடிப்பில் வெளியாகயிருக்கும் டிக்கிலோனா மற்றும் பீச்சாங்கை உட்பட பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமாக உள்ளவர் அஞ்சலி ராவின் கணவர் ஜோமின்.

ஆண் குழந்தை பிறந்துள்ளது
இவ்வாறு தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் அஞ்சலி ராவ், ஜோமின் தம்பதிக்கு தற்பொழுது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்ட இவரின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாயிலாகவும் ,தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.
Recommended Video

மலையாள ரீமேக்கில்
பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொடரான "ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி" நெடுந்தொடரின் மலையாள ரீமேக்கில் நடிகை அஞ்சலி ராவ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications