டீக்கும் பன்னுக்கும்கூட கஷ்டப்பட்டார் கவுண்டமணி.. காமெடி நடிகர் எமோஷனல் பேச்சு
சென்னை: கவுண்டமணி தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில் கவுண்டமணியின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து நடிகர் அனுமோகன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
உடுமலைப்பேட்டையை சொந்த ஊராக கொண்ட கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அவர் ஒரு நாடக கம்பெனியில் இணைந்தார். அங்கிருந்தபடி சினிமாவுக்கும் அவர் முயற்சி செய்ய பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலம் அவர் நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. டைமிங்கில் கவுண்ட்டர் அடிப்பதால் சுப்பிரமணி கவுண்டமணி ஆனார். முதல் படத்திலேயே அவரது நடிப்பும், டைமிங்கும் ரசிகர்களை கவர ஆரம்பித்தன.

கவுண்டமணி - செந்தில் காம்போ: எவர்க்ரீன் காமெடி காம்போ கவுண்டமணியும், செந்திலும் ஆவர். பல நூறு படங்களில் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கின்றனர். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் என அவர்கள் அதகளம் செய்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் பெரிது. ஒருகட்டத்தில் கவுண்டமணி இல்லாமல் செந்தில் இல்லை செந்தில் இல்லாமல் கவுண்டமணி இல்லை என்ற நிலையே திரைத்துறையில் நீடித்தது. அந்த அளவுக்கு இருவரும் நெருங்கி பழகினார்கள். கவுண்டமணி நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தபோது மீண்டும் நடிக்க வர வேண்டுமென்று அவருக்கு நீண்ட கடிதத்தையும் செந்தில் எழுதியது குறிப்பிடத்தக்கது.
விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவர்.
ஓபன் டாக்: கவுண்டமணி எவ்வளவுக்கு எவ்வளவு நகைச்சுவையாக பேசுகிறாரோ அந்த அளவுக்கு ஓபனாகவும் பேசக்கூடியவர். யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைக்கக்கூடியவர். நக்மாவுடன் நான் பாடலுக்கு நடனம் ஆடியே தீர வேண்டும் என்று முடிவு எடுத்து அதை சாதித்தும் காட்டியவர். இந்தச் சூழலில் கவுண்டமணி குறித்து நடிகர் அனுமோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அனுமோகன் பேட்டி: அனுமோகன் பேசுகையில், "சினிமாவில் நடிக்க கவுண்டமணி வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த காலம் அது. ஒரு டீ, பன்னுக்கே மிகவும் கஷ்டப்பட்டார். நாடகத்தில் நடித்து ஐந்து ரூபாய் சம்பளம்தான் வாங்கினார். அந்த ஐந்து ரூபாயை வாங்கிக்கொண்டு வந்து அதில் இரண்டு ரூபாயை கூட இருப்பவர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











