twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் கூட நடிக்க நடிகைகள் தயங்கினாங்க - வாழ்க விவசாயி விழாவில் உருகிய அப்புக்குட்டி

    |

    சென்னை: என் கூட நடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா என்று நடிகர் அப்புக்குட்டி பேசியுள்ளார். அந்த வகையில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். வாழ்க விவசாயி திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அப்புக்குட்டி இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி விடுவேன், எனக்கு நம்பிக்கையிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பால் டிப்போ கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் வாழ்க விவசாயி. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது. வாழ்க விவசாயி படத்தின் டீஸரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

    இவ்விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் ஸ்ரீபாலாஜி, இயக்குநர் சார்லஸ், இயக்குநர் ராசி .அழகப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி.ஜி.சேகரன், தயாரிப்பாளர் டி.சிவா, தயாரிப்பாளர் பால் டிப்போ கதிரேசன், இயக்குநர் பொன்னி மோகன், நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, நடிகர் ஹலோ கந்தசாமி, நடிகை ஸ்ரீகல்கி, நடிகர் திலீபன், பாடகர் அந்தோணி தாசன், இசையமைப்பாளர் ஜெய்கிருஷ், ஒளிப்பதிவாளர் ரத்தன் சந்த், பாடலாசிரியர் தமயந்தி, நடன இயக்குநர் காதல் கந்தாஸ், கலை இயக்குநர் சரவணன் அபிராமன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

    அப்புக்குட்டியும் வசுந்தராவும் விவசாயிகளாக வாழ்ந்திருக்கின்றனர் - இயக்குநர் பொன்னி மோகன்அப்புக்குட்டியும் வசுந்தராவும் விவசாயிகளாக வாழ்ந்திருக்கின்றனர் - இயக்குநர் பொன்னி மோகன்

    ஒரு கோடி சம்பளம்

    ஒரு கோடி சம்பளம்

    விழாவில் படத்தின் ஹீரோ நடிகர் அப்புக்குட்டி பேசுகையில், நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி விடுவேன், எனக்கு நம்பிக்கையிருக்கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா, நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது.

    ஆடு மாடு மேய்ப்பேன்

    ஆடு மாடு மேய்ப்பேன்

    இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது. எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன்.

    ஒரு வேளை சோறு கிடையாது

    ஒரு வேளை சோறு கிடையாது

    எனக்கு ஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை. பிறகு நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன். அதைவிட உண்மையான விசயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது, இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

    இயல்பான படம்

    இயல்பான படம்

    விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்ததால் நாற்று நடுவது, கதிர் அறுப்பது, களை எடுப்பது, அறுவடை செய்வது என விவசாயிகள் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் என் வாழ்வில் செய்துள்ளதால் இந்த படம் எனக்கு மிகவும் இயல்பான படமாக இருந்தது. நான் இப்படத்தில் விவசாயியாக நடிக்கவில்லை வாழ்ந்துள்ளேன் என்றே சொல்ல வேண்டும். இப்படத்தின் கதையை இயக்குனர் அவர்கள் சொல்லும்போது என்னுடைய தாயையே நேரில் கண்டது போல் உணர்ந்தேன்.

    நானும் நடிகன் தானே

    நானும் நடிகன் தானே

    என் கூட நடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா, அந்த வகையில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன், என்றார்.

    English summary
    Speaking at the launch of the music and teaser of the film 'Vazhga Vivasayi', actor Appukutty said, "I will get a salary of one crore rupees. I am confident. Even my actresses are reluctant to act. Why hesitate? Should I not accept myself as an actor, I would like to congratulate the actress who played with me in that way. She said that I hope actresses will come forward to play with me.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X