அப்படியே ஆஜரான பிக் பாஸ் டீம்.. நடிகர் ஆரவ்- நடிகை ராஹி திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து

By

சென்னை: நடிகர் ஆரவ் -நடிகை ராஹி திருமணம் சென்னையில் இன்று எளிமையாக நடந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். 2017-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டவர்.

அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, ஓ காதல் கண்மணி மற்றும் சைத்தான் உள்பட சில படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ஓவியாவுடன் காதல்

ஓவியாவுடன் காதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் ஹீரோ ஆனார். தற்போது ராஜபீமா படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடிகை ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது.

மருத்துவ முத்தம்

மருத்துவ முத்தம்

நடிகர் ஆரவ், அப்போது ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் காதல் தோல்வியில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியானது. இதன் பிறகும் இருவரும் தொடர்ந்து பழகி வருகின்றனர். இதற்கிடையே நடிகர் ஆரவ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

ஜோஷ்வா ஹீரோயின்

ஜோஷ்வா ஹீரோயின்

நடிகர் ஆரவ், ராஹி என்பவரை நீண்ட காலமாகக் காதலித்து வருவதாகவும், இவர்கள் திருமணம் செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆரவ்-வின் காதலி ராஹி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் ஜோஷ்வா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஆடை வடிவமைப்பாளரும் கூட.

எளிமையாக திருமணம்

எளிமையாக திருமணம்

இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து வருவதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கொரு காதலி இருப்பதாக ஆரவ் சொன்னது இவரைத்தான் என்றும் அவர் நண்பர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் இருவரது வீட்டார் சம்மதத்துடன் இன்று எளிமையாக நடைபெற்றது. கொரோனா காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே மாஸ்க் அணிந்து இதில் கலந்து கொண்டனர்.

ஆர்த்தி, பிந்து மாதவி

ஆர்த்தி, பிந்து மாதவி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன், ஹரீஷ் கல்யாண், ஆர்த்தி, பிந்து மாதவி உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர், கொரோனா பிரச்னை முடிந்ததும் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளது. திருமணம் செய்துகொண்ட ஆரவ்- ராஹி ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X