காதல் மனைவிக்கு நடிகர் ஆரவ் செய்து கொடுத்த முதல் சத்தியம்.. என்னென்னு பாருங்க!

சென்னை: தனது காதல் மனைக்கு நடிகர் ஆரவ் செய்து கொடுத்துள்ள முதல் சத்தியம் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஆரவ். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் இவர்தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சக போட்டியாளரான நடிகை ஓவியா ஆரவை தீவிரமாக காதலித்தார்.

ஊர் சுற்றிய போட்டோக்கள்

ஊர் சுற்றிய போட்டோக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றிய போட்டோக்கள் வெளியானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று கேட்டு வந்தனர்.

ராஜ பீமா படங்கள்

ராஜ பீமா படங்கள்

இதனை தொடர்ந்து நடிகர் ஆரவ், இவர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.

முதல் சத்தியம்

முதல் சத்தியம்

இந்த நிலையில் நடிகர் ஆரவுக்கும், நடிகை ராஹிக்கும் சென்னையில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் ஆஜராகினர். இந்நிலையில் நடிகர் ஆரவ் திருமணமான கையோடு தனது காதல் மனைவிக்கு முதல் சத்தியம் ஒன்றை செய்து கொடுத்துள்ளார்.

இமை போல் காப்பேன்

இமை போல் காப்பேன்

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ஆரவ் தனது திருமண போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு இமை போல் காப்பேன் என குறிப்பிட்டு ஹாட்டின் சிம்பளையும் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

ஆரவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனம் விரும்பிய
பொன்மகள் கைகோர்த்து மார்போடு சாய்ந்து அழகிய உறவென பந்தத்தில் இணைந்திட உங்கள் காதல் மேலும் மேலும் தீராமல் ஊற்றெடுக்க திருமணமதில் இருமனம் ஒருமனமென இணைந்து அழகாய் பயணித்திடுங்கள் தம்பதிகளாய்.. மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X