MGR Birthday - எம்ஜிஆர் பிறந்தநாள்.. அவருக்கு போஸ்டர் அடிக்க சொன்னா யாருக்கு அடிச்சிருக்காங்க பாருங்க

சென்னை: புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர். நடிகராக மட்டுமின்றி அதிமுக கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். இன்று அவரது 107ஆவது பிறந்தநாள். இந்த சூழலில் திருப்பத்தூரில் அவருக்கு போஸ்டர் அடிப்பதற்கு பதிலாக இன்னொருவருக்கு அடித்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ்நாட்டில் யாராலும் மறக்கமுடியாத பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். எம்ஜிஆர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இலங்கையின் கண்டியில் பிறந்த அவர் அடிப்படையில் கேரளத்துக்காரர். சில காரணங்களால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த எம்ஜிஆருக்கு கலை மீது ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி பாய்ஸ் கம்பெனி என்ற நாடக குழுவில் இணைந்தார். ஆரம்பத்தில் அவர் பெண் வேடம் ஏற்று நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, காலம் செல்ல செல்ல முக்கியமான ரோல்கள் கிடைத்தன.

 Actor Aravind Samy has made a poster for MGRs birthday

சினிமா எண்ட்ரி: நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி 1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து தொடர்ந்து சினிமா சான்ஸ்கள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி, இரு சகோதரர்கள், வீர ஜெகதீஸ், மாயா மச்சிந்திரா உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்துக்கொண்டே இருந்தார். இருந்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் பெரிதாக கிடைக்கவில்லை.

திராவிட இயக்கங்களுடன் பழக்கம்: சூழல் இப்படி இருக்க திராவிட இயக்க தலைவர்களுடன் எம்ஜிஆருக்கு பழக்கம் ஏற்பட்டு அது நட்பாக மாறியது. குறிப்பாக கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது எம்ஜிஆருக்கு. இதற்கிடையே எம்ஜிஆரும் ஃபேமஸான நடிகராக மாறிவிட்டார். மந்திரிகுமாரி, ராஜகுமாரி, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம், ராஜராஜன், மன்னாதிமன்னன் என பல படங்கள் ஹிட்டடித்தன. தமிழ்நாடு முழுவதுமே எம்ஜிஆரின் செல்வாக்கு அதிகரித்தது.

பிரச்னை: ஒருகட்டத்தில் திகவிலிருந்து திமுகவை தனியாக உருவாக்கினார் பேரறிஞர் அண்ணா. அப்போது அண்ணாவின் தம்பிகளில் ஒருவராக எம்ஜிஆரும் இருந்தார். எம்ஜிஆரின் புகழ் திமுகவுக்கும், திமுகவின் மேடைகள் எம்ஜிஆருக்கும் நிறையவே பயன்பட்டன. சூழல் இப்படி இருக்க பரங்கிமலை தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார் எம்ஜிஆர். அந்த சமயத்தில் பேரறிஞர் அண்ணா இறந்துவிட கலைஞர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியை பிடித்தது. அப்போது தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எம்ஜிஆர் கேட்க; அதற்கு கருணாநிதி மறுக்க திமுகவிலிருந்து விலகி அதிமுகவை உருவாக்கினார் எம்ஜிஆர். அதேசமயம் பொருளாளர் என்ற அடிப்படையில் கணக்கு கேட்டதால்தான் கருணாநிதி எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார் என்றும் ஒரு பேச்சு உண்டு.

ரூல் செய்த எம்ஜிஆர்: எம்ஜிஆர் தனியாக கட்சியை ஆரம்பித்த பிறகு 1977ஆம் ஆண்டு தேர்தலில் வென்று எம்ஜிஆர் ஆட்சி அமைத்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இடையில் 1980ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் நடந்த தேர்தலில் அவரே வென்று முதலமைச்சர் ஆனார். அந்தக் காலத்தில் கருணாநிதிக்கு அரசியலில் வனவாசம் என்றுதான் சொல்ல வேண்டும். சூழல் இப்படி இருக்க உடல்நலக்குறைவால் 1987ஆம் ஆண்டு உயிரிழந்தார் எம்ஜிஆர்.

இன்று பிறந்தநாள்: அவர் உயிரிழந்தாலும் அவரது உதவும் குணமும், அவரது புகழும் இன்றுவரை இறக்காமல் இருக்கின்றன. 87ஆம் ஆண்டு எம்ஜிஆர் உயிரிழந்ததை அடுத்து அடுத்த வருடம் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. இந்த சூழலில் இன்று அவருக்கு 107ஆவது பிறந்தநாள் ஆகும். இதனையொட்டி அவரது ரசிகர்களும் தொண்டர்களும் தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்கள்.

அரவிந்த்சாமிக்கு போஸ்டர்: அந்தவகையில் திருப்பத்தூரிலும் அதிமுகவினர் எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடித்தனர். ஆனால் ஒரு ட்விஸ்ட்டாக அந்தப் போஸ்டரில் எம்ஜிஆருக்கு பதிலாக அவரது கெட்டப்பில் இருக்கும் நடிகர் அரவிந்த் சாமி இடம்பெற்றிருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி (ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு) படத்தில் எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்திருப்பார். அந்தப் புகைப்படத்தைத்தான் அவர்கள் போஸ்டரில் அடித்திருக்கிறார்கள். அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X